வைகுண்ட ஏகாதசி பெருவிழா : நாளை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு!

நாளை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு. பக்தர்களின் வசதிக்காக ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்லும் படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

tomorrow srirangam vaikunta ekadasi sorgavasal thirappu 2023 southern railway express trains will stop at srirangam station in tamil mks

திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும். ஆனால் அவை எல்லாவற்றையும் விட, மார்கழி மாதத்தில் 20 நாட்களில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா தான் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

பொதுவாகவே, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து இரவுபத்து என 20 நாட்களில் நடைபெறும். அதுவும் வைகுண்ட ஏகாதசி நாளன்று அனைத்து பெருமாள் கோவில்களிலும்  வைகுண்ட ஏகாதசி நாளன்று அதிகாலையில் சொர்க்க வாசல்  திறக்கப்பட்டு, அதன் வழியாக பக்தர்களுக்கு பெருமாள் எழுந்தருளி,  அருள்பாலிக்கும் நிகழ்வு நடைபெறும். அந்தவகையில், இந்தாண்டு டிசம்பர் 12ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா   தொடங்கியது. மேலும் நாளை (டிச. 23) வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.

இதையும் படிங்க:  நாளை வைகுண்ட ஏகாதசி.. இதன் சிறப்பு என்ன? எப்படி விரதம் இருக்க வேண்டும்? சொர்க்கவாசல் ஏன் திறக்கப்படுகிறது?

தமிழ்நாடு முழுவதும் இருக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த  ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவில் பங்கேற்பது வழக்கம். எனவே, பக்தர்களின் வசதிக்காக ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில்கள் நின்று செல்லும் படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அது குறித்த விவரங்கள் இங்கே பார்க்கலாம்..

இதையும் படிங்க:  வைகுண்ட ஏகாதசி 2023 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள் இதோ..!!

அதன்படி, வைகுண்ட ஏகாதசி அன்று ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் ரயில்கள் குறித்த நேரம் இதோ...
டிசம்பர் 22, 23 ஆகிய இரண்டு  நாட்களில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (12633) சென்னையில் இருந்து மாலை 05.20 மணிக்கு புறப்படுகிறது. அதுபோல், சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (12634) கன்னியாகுமரியில் இருந்து மாலை 05.50 மணிக்கு புறப்படுகிறது.  மேலும், கொல்லம் எக்ஸ்பிரஸ் (16101) சென்னையில் இருந்து மாலை 05.00 மணிக்கு புறப்படுகிறது. மற்றும் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16102) கொல்லத்தில் இருந்து மதியம் 12.00 மணிக்கு புறப்படுகிறது. இவை அனைத்தும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் மட்டும் நின்று செல்லுமாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அதேபோல, தைப்பூச இருமுடி திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக சென்னை - திருநெல்வேலி வாராந்திர ரயில் மேல்மருவத்தூரில் தற்காலிகமாக நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. டிசம்பர் 22 முதல் ஜனவரி 19 வரை மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி, காரைக்குடி, மானாமதுரை வழியாக இயக்கப்படும் சென்னை - திருநெல்வேலி வாராந்திர ரயில் (06069) மற்றும் டிசம்பர் 28 முதல் ஜனவரி 18 வரை திருநெல்வேலி - சென்னை வாராந்திர ரயில் (06070) மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios