இன்று சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை: நாளை மண்டல பூஜை!

இன்று (டிச. 26) மாலை சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது. நாளை மண்டல பூஜையுடன் இந்த ஆண்டு மண்டல காலம் நிறைவடைகிறது.

today sabarimala ayyappan will be dressed in a golden robe and mandal puja will be held tomorrow in tamil mks

உலகப் புகழ்பெற்ற சபரிமலை கோயில் கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது. இங்கு இருக்கும் ஐயப்பனை தரிசிக்க ஒவ்வொரு ஆண்டும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த கோயிலின் நடையானது மற்ற கோயில்களை போல தினமும் திறந்திருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், கார்த்திகை மாதம் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை என 41 நாட்கள் இக்கோயிலின் நடை திறக்கப்பட்டிருக்கும். அதுபோல், மார்கழி மற்றும் தை மாதத்திலும் மகர விளக்கு பூஜைக்காக இக்கோயிலின் நடை திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த கோயிலில் பங்குனி மாதத்தில் நடக்கும் ஆராட்டு விழாவும், சித்திரை மாதத்தில் நடக்கும்  விஷூகனி காணும் விழாவும் வெகு சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 16 ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடையானது திறக்கப்பட்டது. மேலும் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு சபரிமலைக்கு பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது.

இதையும் படிங்க:  இது என்னடா வம்பா போச்சு.. ஐயப்ப பக்தர்கள் குவியும் நேரத்தில் கேரளாவில் மீண்டும் வேலையை காட்டும் கொரோனா.!

சபரிமலை ஐயப்பனுக்கு நாளை மண்டல பூஜை நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. அதன் படி, இன்று (டிச. 26) மாலை சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது. நாளை மண்டல பூஜையுடன் இந்த ஆண்டு மண்டல காலம் நிறைவடைகிறது. ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து டிசம்பர் 23ஆம் தேதி புறப்பட்ட தங்க அங்கி பவனி இன்று மாலை சன்னிதானம் சென்றடைகிறது.

இதையும் படிங்க:   எங்க அப்பாவை கண்டுபிடிச்சு கொடுங்க.. கதறி அழுத குழந்தை.. சபரிமலையில் அதிர்ச்சி சம்பவம்.!!

இன்று தங்க அங்கி வருவதையொட்டி நிலக்கல் - பம்பை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி காலை 11:00 மணி வரை வரும் வாகனங்கள் மட்டுமே நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு செல்ல அனுமதிக்கப்படும். அதன்பிறகு வரும் வாகனங்கள் மதியம் 2:00 மணிக்குப் பிறகுதான் பம்பைக்குள் அனுமதிக்கப்படும். மேலும், பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் பக்தர்களுக்கு இன்று மதியம் முதல் தங்க அங்கி சன்னிதானம் வரும் வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அதேபோல், இன்று மதியம் 1:00 மணிக்கு மூடப்படும் சபரிமலை நடை மாலை 5:00 மணிக்கு மட்டுமே திறக்கப்படும். மாலை 6:30 மணிக்கு தீபாராதனை முடிந்து பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இறுதியாக மண்டல பூஜை நாளை காலை 10:30 முதல் 11:30 மணிக்குள் நடைபெறும். இதன்போது,   தேவசம் போர்டு சார்பில் அய்யப்பனுக்கு சிறப்பு கலபாபிஷேகம் நடத்தப்பட்டு, தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை நடத்தப்படும். இதையொட்டி நாளை காலை 9:00 மணி வரை மட்டுமே நெயாபிஷேகம் நடக்கிறது. நாளை இரவு 10:00 மணிக்கு இந்த ஆண்டுக்கான மண்டல காலம் முடிவடைகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios