இன்று கார்த்திகை அமாவாசை.. இதை செய்தால் போதும்.. பிரச்சனைகள் நீங்கி சகல நன்மைகளும் கிடைக்கும்..
செவ்வாய்கிழமையான இன்று அமாவாசை வருவதால் மிகவும் சிறப்புவாய்ந்ததாக கருதப்படுகிறது
அமாவாசை என்பது இந்துக்களின் முக்கிய விரதநாளாகும். அமாவாசை நாளில் மறைந்த முன்னோர்களின் அருள் மற்றும் ஆசி நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த ஆண்டின் கடைசி அமாவாசை இன்று கடைபிடிக்கப்படுகிறது. செவ்வாய்கிழமையான இன்று அமாவாசை வருவதால் மிகவும் சிறப்புவாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நாளில் முன்னோர்களை வழிபட்டால் முன்னோர்களின் ஆசியை பெற முடியும் என்பது ஐதீகம். கார்த்திகை மாதத்தில் வரும் இந்த அமாவாசையில் கங்கையில் நீராடுவதும், அன்னதானம் செய்வதும் சிறப்பு என்று ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அமாவாசை அன்று சூரிய உதயத்திற்கு முன்பே கடற்கரை, மகாநதிகள், ஆறுகள், குளங்களில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் தர வேண்டும்.முன்னோர்களை வழிபட்ட பின்னரே பூஜைகளை செய்ய வேண்டும். சைவ உணவு மட்டுமே சாப்பிட்டு மற்ற கேளிக்கைகளை தவிர்க்க வேண்டும். மேலும் பிரம்மாச்சாரிகள், சாதுக்கள், வைஷ்ணவர்கள், துறவிகள் ஆகியோருக்கு அன்னதானம் வழங்கினால் யாகத்திற்கு இணையான பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பித்ருக்களுக்கு பூஜை செய்து, அந்தணர்களுக்கு பூசணிக்காய், வாழைக்காய், போன்ற காய்கறிகள் தானம் கொடுக்க வேண்டும். பின்னர் வீட்டில் இருக்கும் முன்னோர் படங்களுக்கு துளசி மாலை அணிவித்து, முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படைத்து வணங்கி அதை காக்கைக்கு வைத்து பிறகே சாப்பிட வேண்டும். அமாவாசை தினத்தன்று ஏழைகளுக்கு ஆடைகளை தானமாக வழங்கலாம்.
திருப்பதி லட்டு என்றும் தரம் மாறாது! உத்தரவாதம் கொடுக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம்!
கடனில் இருந்து விடுபடுவதற்கு அமாவாசை திதி சிறப்பானதாக கருதப்படுகிறது. எனவே இந்த நாளில் முடிந்தவரை அன்னதானம் செய்வதும், முன்னோர்களை வணங்குவது சிறப்பான பலன்களை கொடுக்கும். மேலும் பித்ரு சாபம், முன்னோர்கள் சாபம் ஆகியவை நீங்கி வாழ்வில் சுபிக்ஷம் உண்டாகும் என்பது ஐதீகம். முன்னோர்களின் ஆசி கிடைத்தாலே நம் வாழ்வின் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி புத்திர பாக்கியம், ஞானம், கல்வி, செல்வம் என சகல நன்மைகளும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.