அய்யா வைகுண்டரின் 191வது அவதார தினம்; குமரியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
அய்யா வைகுண்டரின் 191 வது அவதார தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து சுவாமிதோப்பு வைகுண்டர் தலைமை பதிக்கு நடைபெற்ற பிரமாண்ட ஊர்வலத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய அய்யாவைகுண்டரின் பிறந்த நாளான மாசி மாதம் 20ம் தேதி, அய்யா வைகுண்டர் அவதார தினவிழாவாக 'அய்யாவழி' சமூகத்தினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி அய்யா வைகுண்டரின் 191வது அவதார தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி நெல்லை, துாத்துக்குடி, உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்,கேரளாவில் இருந்தும் நேற்றே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாகர்கோவில் வந்தனர். தொடர்ந்து இன்று அதிகாலை நாகர்கோவில் நாகராஜாகோவிலில் இருந்து சுவாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டரின் தலைமை பதி நோக்கி அய்யா அவதார தினவிழா பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. பேரணியின் முன்பாக அய்யாவின் 'அகிலதிரட்டு' புத்தகத்தை, காவிக்கொடி பக்தர்கள் பூப்பல்லக்கில் எடுத்து சென்றனர்.
கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், தென்தாமரைகுளம் வழி ஊர்வலம் சுவாமித்தோப்பு சென்றடைந்த இந்த பேரணியில் முத்துக்குடைகள், மேலதாளங்கள் இடம்பெற்றிருந்தன. பேரணியில் இடம்பெற்றிருந்த குழந்தைகளின் கோலாட்டம் வழிநெடுகிலும் கூடி இருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது,அய்யா வைகுண்டர் அவதார தின பேரணியை முன்னிட்டு நாகர்கோவில் முதல் சுவாமிதோப்பு வரையிலான போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இத்தினத்தை முன்னிட்டு குமரி மாவடத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ராணிபேட்டையில் பயங்கரம்: திருமணத்திற்கு சென்ற நபர் மணல் லாரி மோதி பலி
இதில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர். விஜய்வந்த் ஊர்வலத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார், மேலும் கோட்டார் சவேரியார் ஆலய நிர்வாகம் பாரம்பரியமாக அய்யா அவதார தின ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் குருமார்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைப்பெற்றது, மேலும் இந்த வழக்கம் தொன்று தொட்டு நடந்து வருவதாகவும்,இந்த விழாவை சமய நல்லிணக்க விழாவாக கருதவதாகவும் அருள்தந்தை. ஸ்டான்லி சகாயசீலன் தெரிவித்தார்.
திருச்சி மக்களின் உணர்வுகளில் ஒன்றான காவிரி பாலம் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது