Asianet News TamilAsianet News Tamil

இறந்தவர்கள் உங்க கனவில் வந்தால் இத்தனை அர்த்தங்கள் இருக்குது தெரியுமா? 17 கனவுகளின் விளக்கம்!!

இறந்தவர்கள் உங்கள் கனவுகளில் மீண்டும் மீண்டும் தோன்றினால் அதற்கு என்ன அர்த்தம் என்பதை இங்கு விரிவாக காணலாம். 

tamil meaning of seeing dead people in dreams
Author
First Published May 30, 2023, 5:46 PM IST | Last Updated May 30, 2023, 5:46 PM IST

பெரும்பாலானவர்கள் கனவில் இறந்தவர்கள் வருகிறார்கள். அவர்கள் வாழும்போது உங்களுடன் நெருக்கமாக இருந்திருக்கலாம். இப்படி இறந்தவர்கள் கனவில் வரவும் சில காரணங்களும் அர்த்தமும் உள்ளது. கனவில் இறந்தவரைக் கண்டால் அது நல்லதா, கெட்டதா, மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா அல்லது எச்சரிக்கையாக இருக்க வேண்டுமா என்பதை இங்கு அறிந்து கொள்ளுங்கள். 

கனவுகளின் விளக்கம்!!

1. ஒரு ஆரோக்கியமான நபர் திடீரென இறந்துவிட்டார். அவர் உங்கள் கனவில் வருகிறார்.. அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், இறந்த நபருக்கு அவர் நிறைவேற்ற விரும்பும் ஆசை இருப்பதாக அர்த்தம். உங்கள் வீட்டில் யாராவது நோய்வாய்ப்படுவார்கள் என்றும் அர்த்தம். 

2. ஒருவர் நோயால் இறந்து, கனவில் உங்களுக்கு ஆரோக்கியமாகத் தோன்றினால், அவர் நல்ல பிறவி அல்லது இடத்தைப் பெற்று இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று அர்த்தம்.

3. உங்கள் கனவில் இறந்த உறவினர் உங்களுடன் பேசுவதைக் கண்டால், அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இப்போது உங்கள் நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும் என்றும் அர்த்தம்.

4. இறந்த ஒருவர் கனவில் உங்களுக்கு அறிவுரை கூறினால், கண்டிப்பாக அவருடைய ஆலோசனையைப் பின்பற்றுங்கள். அதன் மூலம் நீங்கள் நிச்சயம் பலன் அடைவீர்கள். 

5. உங்களுக்கு தெரிந்தவ நபர் இறந்த பின் உங்கள் கனவில் வந்து கோபமாகவோ அல்லது அழுவதையோ கண்டால், அவருடைய சில ஆசைகள் நிறைவேறவில்லை என்று அர்த்தம்.

6. இறந்தவர் கனவில் தோன்றி, உங்களிடம் ஏதாவது சொல்ல முயன்றாலும், உங்களுக்கு எதுவும் புரியவில்லை என்றால், ஏதோ நெருக்கடி வருகிறது என்று அர்த்தம்.

7. இறந்த உறவினர் உங்கள் கனவில் தோன்றி அமைதியாக இருந்தால், நீங்கள் ஏதோ தவறு செய்கிறீர்கள் அல்லது எதிர்காலத்தில் ஏதாவது தவறு செய்வீர்கள் என்று அவர் உங்களிடம் சொல்ல விரும்புகிறார் என்று அர்த்தம்.

8. முன்னோர் கனவில் உங்களை ஆசீர்வதித்தால், எதிர்காலத்தில் நீங்கள் சில வேலைகளில் வெற்றி பெறுவீர்கள் என்று அர்த்தம்.

9. மறைந்த முன்னோர் அல்லது உறவினர்கள் கனவில் சோகமாக இருந்தால், அவர்கள் உங்களால் மகிழ்ச்சியாக இல்லை என்று அர்த்தம். அவர்கள் கோபமாக அல்லது அழுவதைப் பார்த்தால், ஏதோ நெருக்கடி வரப்போகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

10. உங்களின் இறந்த உறவினர்கள் எங்கோ தொலைவில் வானத்தில் இருப்பதை உங்கள் கனவில் கண்டால் அவர்கள் முக்தி அடைந்து விட்டதாக அர்த்தம்.

12. உங்களுக்கு அறிமுகமானவர்கள் இறந்த பின்னர் வீட்டில் அல்லது அருகில் ஏதேனும் ஒரு இடத்தில் இருப்பது போல கனவில் தோன்றினால், அவர்கள் உங்களால் ஏமாற்றமடையக்கூடும். அவரது ஆத்மா சாந்தியடைய ஏதாவது செய்ய வேண்டும்.

13. கனவில் இறந்த உறவினர்கள் மீண்டும் மீண்டும் வருவது அவர்களின் ஆன்மா அலைந்து திரிகிறது என்று அர்த்தம். அவர்களால் மறுஜென்மம் பெற முடியவில்லை அல்லது அவர்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை என அர்த்தம். அவரது ஆன்மா சாந்தியடைய தர்ப்பணம் போன்றவற்றைச் செய்ய வேண்டும். 

இதையும் படிங்க: வீட்டில் பணம் சேர!! செல்வம் அருளும் மகாலட்சுமியின் ஆசியை பெற வாஸ்துபடி வளர்க்க வேண்டிய செடிகள்!!

14. இறந்த உறவினர் கனவில் உணவு அல்லது தண்ணீர் கேட்டால் அது சுபமாக கருதப்படாது. உங்களுக்கு கெட்ட காலம் வரப்போகிறது என்று அர்த்தம்.  

15. உங்கள் இறந்த தந்தையோ அல்லது மற்ற உறவினரோ கனவில் எதையாவது கொடுப்பதை நீங்கள் கண்டால், அது சுபம் மற்றும் நீங்கள் அதை எடுத்துக்கொள்வதை நீங்கள் கண்டால், அது அசுபமானது.

16. இறந்த தந்தை உயிருடன் இருப்பதைக் கனவில் பார்ப்பது, அவருக்குப் பதிலாக ஒருவரை தந்தையாகக் கருதி நீங்கள் அவருடைய கட்டளைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்பதற்கான அறிகுறியாகும்.

17. உங்கள் தாய் அல்லது தந்தை உங்கள் கனவில் புன்னகைப்பதைப் பார்ப்பது, நீங்கள் அவர்களிடம் வசதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள் என அர்த்தம். அவர்களை நினைத்து வருத்தப்பட வேண்டாம். 

இதையும் படிங்க: புதிய நாடாளுமன்ற வாஸ்து..! இந்தியாவோட நிலைமை இனி இதுதானாம்... பிரபல ஜோதிடரின் கணிப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios