பல்லாயிரம் கோடி சொத்துக்களை கொண்ட பத்மநாபசாமி கோவிலுக்கு இந்த நிலைமையா? கடும் அதிர்ச்சியில் பக்தர்கள்
இந்தியாவின் பணக்கார கோவிலான ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டு, தினசரி பூஜைகளை நடத்த முடியாமல் திணறி வருகிறது என்ற செய்தி வெளியாகி பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகின் உள்ள பணக்கார ஆலயங்களில் ஒன்றான கேரளாவின் தலைநகராக திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் 6 ரகசிய அறைகள் பூட்டப்பட்டு இருந்தன.
அதில் இருந்த பிரமிக்க வைக்கும் தங்கம், வைர நகைகள், சிலைகள் இருந்தன. திருப்பதிக்கு சமமாக, இந்து கோவில்களில் மிகவும் பணக்கார கோவிலாக இந்த ஆலயம் கருதப்படுகிறது. ஆனால் மூடப்பட்டிருக்கும் கதவுகளுக்குப் பின்னே இருக்கும் மர்மமான பெட்டகங்களில் திருப்பதியை மிஞ்சும் அளவுக்கு கூட பொக்கிஷம் இருக்கின்றது என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.
பத்மநாத சுவாமி ஆலயம் உலகிலேயே மிகவும் செல்வ வளம் மிக்க ஆலயமாக இருப்பதற்கு முக்கிய காரணமாக பல ஆண்டுகளாக கோவிலில் செலுத்தப்படும் நன்கொடைகள் என்று கூறப்படுகிறது. இந்த கோவிலின் ஆறு பெட்டகங்கள் இருக்கின்றன ஆனால் புராணங்களின்படி, கோவில் வரலாற்று கதைகளின்படி இவை அனைத்துமே ஒரு சாபம் பெற்று இருக்கிறது என்றும், எனவே கோயிலின் பொக்கிஷங்கள் அனைத்துமே வெவ்வேறு பெட்டகங்களில் தனித்தனியாக பூட்டப்பட்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க..Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெல்லப்போவது எந்த கட்சி.? வெளியானது பரபர சர்வே முடிவுகள்
மேலும் சுப்ரீம் கோர்ட் கமிட்டி மெம்பர்கள் தேடலின் படி மறைந்திருந்த ஆறு அறைகள் கண்டறியப்பட்டன. இந்த அறைகளின் கதவுகள் கடினமான இரும்பால் செய்யப்பட்டு இருந்தது மற்றும் திறப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது. இந்த அறைகள் ஒவ்வொன்றும் ஆங்கில எழுத்துக்களின்படி A முதல் F வரை பெயரிடப்பட்டது. இந்த அறைக்குள் நுழைவது மிகவும் சவாலாக இருந்தது.
ஆனால் குழுவினர் தொடர்ந்து சளைக்காமல் தேடியதன் விளைவாக தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் விலையுயர்ந்த நவரத்தின கற்கள் மட்டுமல்லாமல் கடவுளின் சிலைகள், விலை உயர்ந்த உலோகங்களால் செய்யப்பட்ட சிம்மாசனம் ஆகியவையும் கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு தோராயமாக 1 லட்சம் கோடி ரூபாய் என்று கூறப்பட்டது. ஆனால் இதில் வால்ட் B என்ற பெட்டகம் திறக்கப்படவில்லை.
யாரேனும் இந்த பெட்டகத்தை திறக்க முயற்சி செய்தால் அவர்களுக்கு துரதிஷ்டம் ஏற்பட்டு அசம்பாவிதங்கள் நிகழும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் 1 கோடி கடனை உடனடியாக தீர்க்காவிட்டால், ஸ்ரீபத்மநாபசுவாமி கோவிலில் பூஜை பொருட்கள் விநியோகம் நிறுத்தப்படும் என்றும், இதனால் அன்றாட சடங்குகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என்றும் நுகர்வோர் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரிசி, மசாலாப் பொருட்கள் மற்றும் இதர பூஜைப் பொருட்கள் பொதுவாக நுகர்வோர் பெட் மற்றும் மார்க்கெட் ஃபெடரிடமிருந்து வாங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு மே மாதம் வரை 28.55 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ள நிலையில், டிசம்பர் மாத நிலவரப்படி கன்ஸ்யூமர்ஃபெட் ரூ.73.57 லட்சம் கடன் நிலுவையில் உள்ளது. முழுத் தொகையும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும், வழங்கப்படாமல் உள்ளது.
டிசம்பர் 21ம் தேதி, கன்ஸ்யூமர்ஃபெட் மண்டல மேலாளர், பத்மநாபசுவாமி கோயில் செயல் அலுவலருக்கு முழுத் தொகையையும் வழங்கக் கோரி கடிதம் அனுப்பினார். ஸ்டோர் கீப்பரின் கடிதத்தின்படி, கன்ஸ்யூமர்ஃபெட் அதிகாரிகளை அழைத்து, நிலுவைத் தொகையை உடனடியாக வழங்காவிட்டால், சரக்கு விநியோகம் நிறுத்தப்படும் என்று எச்சரித்ததாகவும், கடந்த மூன்று மாத நிலுவைத் தொகையையும் சேர்த்தால், நிலுவைத் தொகை அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், ஆட்சிக் குழுவில் உள்ள அரசுப் பிரதிநிதி மாதவன் நாயர், நிதி நெருக்கடி இல்லை எனக் கூறி, கடையில் இருந்து பில்களை சரிபார்த்து, பணம் ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டதால், கடன் நிலுவை ஏற்பட்டது. 235 ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் உட்பட கோயிலின் மாதச் செலவு ரூ.1.25 கோடி.
கோயிலின் முன்னாள் செயல் அலுவலர் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துக்காக அரசிடம் ரூ.10 கோடி கோரிய நிலையில், ரூ.2 கோடி மட்டுமே வழங்கப்பட, ஓராண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இருந்தும் இதுவரை பணம் செலுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் முக்கிய பணக்கார கோவிலுக்கு இப்படியொரு நிலைமையா என்று பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதையும் படிங்க..எடப்பாடி அண்ணே நீங்கதான் பொதுச்செயலாளர்!.. கைவிட்ட பாஜக.. காலியாகும் ஓபிஎஸ் கூடாரம் - தர்மயுத்தம் 2.0 ரெடி