சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டி : இந்த முறை பூஜை செய்யப்பட்ட பொருட்கள் என்னென்ன?
சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் அஸ்திரங்கள் ரூபாய் நோட்டு எலுமிச்சை பழம் வைத்து பூஜை நடத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சிவன்மலை. இந்த கோவிலின் மலை உச்சியில் முருகப்பெருமான் கோவில் உள்ளது. இங்கு வள்ளி தெய்வானையுடன் முருகபெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கொங்கு மண்டலத்தில் இந்த சிவன்மலை முருக பெருமாள் கோவில் புகழ் பெற்றது. கந்தனின் பாதம் கனவிலும் காக்கும் என்ற வாசகத்தை உச்சரிக்கும் பக்தருக்கு வாழ்நாள் முழுவதும் முருகப்பெருமான் துணை இருப்பதாக நம்பிக்கை உள்ளது.
இந்த கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டி சிறப்பம்சமாகும். முருகனை மனமுருக வேண்டும் மக்கள் கனவில் முருகப்பெருமான் தோன்றி அருள்வாக்கு கூறும் பொருளை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்படும். அப்படி பூஜை செய்யப்படும் பொருள்களுக்கு காலநிலை எதுவும் கிடையாது. அடுத்த பொருள் ஆண்டவன் உத்தரவு பெட்டிக்கு வரும் வரை பழைய பொருள் இடம் பெற்று இருக்கும். இந்த உத்தரவு பெட்டியில் வைத்து பூஜைக்குப்படும் பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மக்களின் நம்பிக்கை.
அந்த வகையில் காங்கேயம் அருகே முத்தூரைச் சேர்ந்த விவசாயி கோகுல்ராஜ் வயது 38 என்ற பக்தர் கனவில் விருஸ்ப அஸ்திரம், தனூர்பாண அஸ்திரம், வருண அஸ்திரம், பாசுபத அஸ்திரம், பணம் ரூ.101, 6 எலுமிச்சை பழங்கள் ஆகியவை வைத்து பூஜை செய்ய உத்தரவு கிடைத்தது. இந்த விவரத்தை அவர் கோவில் நிர்வாகித்திடம் தெரிவித்தார் அதன்படி நேற்று முதல் வஸ்திரங்கள், ரூ 101, எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்யப்படுகின்றது.
இதற்கு முன்னதாக ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி முதல் தீர்த்தக் கலசம் வைத்து பூஜை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பக்தர் தரப்பில் கூறும் போது ஆண்டவன் உத்தரவு பெட்டில் வைத்து பூஜை செய்யப்படும் நாள் அஸ்திரங்கள் பணம் எலுமிச்சை பழம் ஆகியவை சமூகத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படும் என்பது வரும் நாட்களில் தெரியவரும் என்று தெரிவித்தனர்.