இறைவனை மகிழ்ச்சிப்படுத்தும் எளிமையான அபிஷேக பொருள்கள்!

தடுக்கி விழுவது முதல் தள்ளாடும் காலம் வரை எல்லாவற்றுக்குமே இறைவன் தான் துணை நிற்கிறான். இறைவனிடம் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம்.  நம்மை காக்கும் பொறுப்பு எல்லாமே அவனுடையது என்பதால்  அவனிடம் தயக்கம் இல்லாமல் எல்லாமே கேட்கலாம். 
 

Simple Anointing Items That Make God Happy

இறைவனிடம் செல்வத்தை கொடு, குபேரன் போல் வைத்திரு, நோயில்லாமல் வைத்திரு, வீடு பேறை அளி  நிம்மதியை கொடு என்று மட்டும் கேட்காமல் திருமணத்தடை. நல்ல வேலை, குழந்தைகளுக்கு கல்வி, குழந்தைப்பேறு  வேண்டி பரிகாரம் செய்வதும் உண்டு. அதில் ஒன்று குழந்தைப்பேறு வேண்டி பரிகாரம்  செய்வது. அதோடு இறைவனை மகிழ்விக்க நம்மால் இயன்ற தான தர்மங்களையும் சிறப்பு மிக்க வரலாற்று திருத்தலங்களையும்  சென்று தரிசிப்பதும் கூட உண்டு. இறைவனின் மனதை குளிர்விக்க இறைவனுக்கு பிடித்த பொருள்களில் அபிஷேகம் செய்தால் மனமுவந்து பக்தர்களின் குறையை இறைவன் தீர்ப்பான் என்பது ஆச்சார்ய பெருமக்களின் வாக்கு. 

எந்த அபிஷேகத்துக்கு என்ன பலன் என்பதை அறிந்து அதை சரியான முறையில் செய்து குறையை நிவர்த்தி செய்துகொண்டவர்களும் நம் முன்னோர்கள்தான். ஏனெனில்  கடவுளிடம் எனக்கு இந்த செல்வத்தை கொடேன் உனக்கு நான் இதை செய்கிறேன் என்று வேண்டுதல் விடுப்பது உண்டு. ஆனால் அதற்கு மாற்றாக எனக்கு  இதை செய்யுங்கள் இறைவா என்று முன்கூட்டியே இறைவனை மகிழ்விக்கும் வகையில் பிரார்த்தனை செய்தால் இறைவனின் உள்ளம் மேலும் குளிரும். 

அத்தகைய வழிபாட்டுக்கும் நிச்சயம் பலன் உண்டு.  அப்படி நீங்கள் செய்யும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பலன் உண்டு.  அவை என்னென்ன என்பதை தெரிந்துகொள்வதோடு இனி அதை கடைப்பிடிக்கவும் செய்யுங்கள். 

Simple Anointing Items That Make God Happy

நெய் அபிஷேகம்:

குடும்பத்தில் அமைதி குலைந்து நிம்மதியின்றி  இருந்தால் நீங்கள் நெய் அபிஷேகம் செய்யுங்கள். இறைவன் மனம் குளிர்ந்து அமைதியை அளிப்பார். 

இளநீர்:

இளநீரினால் அபிஷேகம் செய்தால் குடும்பத்தில் இருக்கும் வேற்றுமைகள் நீங்கும். ஒற்றுமை தங்கும்.  உறவினர்களுடனான பகை முறிந்து சந்தோஷம் பெருகும். அனைவரும் ஒன்று கூடி வாழ்வீர்கள். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும்.  

பசும்பால்

தூய்மையான பசும்பால் ஆயுளை நீட்டிக்க உதவும். 

நல்லெண்ணெய்

குடும்பத்தில் எப்போது சச்சரவுகளும் சஞ்சலங்களும் இருந்தால் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்யுங்கள். 

கரும்புச்சாறு

குடும்பத்தில் மாறி மாறி பிணிகள் தொற்றினால் அதை தவிர்க்க கரும்புச்சாறினால் அபிஷேகம் செய்யலாம். 

எலுமிச்சை சாறு

மனதில் எப்போதும் குழப்பம், அச்சம் கவலை என்று இருந்தால்  எலுமிச்சை சாறு அபிஷேகம் சிறந்ததாக இருக்கும். 

Simple Anointing Items That Make God Happy

பஞ்சாமிர்தம்

வீட்டில் செல்வம் உண்டாக இனிப்பு மிக்க பழங்கள், உயர்ந்த உலர் பருப்புகள், உலர் பழங்கள், பால், தயிர்,. நெய் கலந்து செய்யப்படும் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யலாம்.  தடையில்லா செல்வத்தை இவை உண்டு செய்யும். 

Aja Ekadasi : முன்னோர்களின் பாவத்தையும் தீர்க்குமாம் அஜா ஏகாதசி!

பசுந்தயிர் அபிஷேகம்

புத்திரபாக்கியம் கிடைக்க பசும்பாலை தயிராக்கி அதில் அபிஷேகம் செய்ய வேண்டும். 

அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்க பஞ்சகவ்ய அபிஷேகம் சிறந்தது. 

இறைவனை அபிஷேகத்தால் குளிர்வித்தால் அவன் மனம் குளிர்ந்து வேண்டியதை செவ்வனே நிறைவேற்றுவான் என்பது ஐதிகம். உண்மையும் கூட. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios