Karungali Malai benefits and prasadam in Tamil : செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட கருங்காலி மரம், குலதெய்வ அருளையும், தடைகளற்ற வெற்றியையும் தரக்கூடியது. அதை முருகனின் பாதத்தில் வைத்து பிரசாதமாகப் பெறுவது கூடுதல் சிறப்பாக சொல்லப்படுகிறது.

Karungali Malai benefits and prasadam in Tamil : திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே, ராமலிங்கம்பட்டி என்ற கிராமத்தில் பாதாள செம்பு முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் கருவறை பூமிக்கு அடியில் 16 அடி ஆழத்தில் உள்ளது. பாதாளத்தில் பூமிக்கு அடியில், செம்பு உலோகத்திலான முருகன் வீற்றிருப்பதால் பாதாள செம்புமுருகன் என்ற பெயர் உருவானது. பாதாளத்தில் உள்ள கருவறைக்குச் சென்று முருகப்பெருமானை வழிபடுவதற்கு பக்தர்கள் 18 படிகளை ஏறி இறங்கிச் செல்கின்றனர்.

கோவிலின் சிறப்புகள்: 1. திருநீறு: 

கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு திருநீறு பிரசாதமாக வழங்கப்படுகிறது இக்கோயில் வழங்கப்படும் திருநீறு யானை சாணம் மாட்டு சாணம் நறுமணப் பொருட்கள் மருத்துவ பொருட்கள் 18 வகையை உள்ளடக்கியதாக உள்ளது இதை அனைத்தையும் வெயிலில் உலர்த்தி பொடித்து அதில் விபூதி உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது இதை செய்வதற்கு ஏழு மாதங்கள் வரை ஆகும் என்றும் சொல்லப்படுகிறது. 

2.கருங்காலி மாலைகள்: 

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கருங்காலி மாலை பிரசாதமாக வழங்கப்படுகிறது.கருங்காலி மாலைகளை, முருகனின் பாதத்தில் வைத்து பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதேபோல் கருங்காலி வேல், சந்தன வேல் ஆகியவற்றை முருகனுக்கு சாத்தி பக்தர்கள் வழிபடுகின்றனர்.

கோவிலின் அமைப்பு: 

பாதாள கருவறையில், முருகப்பெருமான் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். வலது கையில் அபய முத்திரையும், இடது கையில் வேல் ஏந்தியும் காட்சி தருகிறார். இந்த சிலைக்கு முன்பு, திருக்கோவிலூர் சித்தர் வழிபட்ட முருகன் சிலையும் உள்ளது. கோவிலின் முன்புறம் கிழக்கு நோக்கியபடி காவல் தெய்வமான சங்கிலி கருப்புசாமி கம்பீரமாக வீற்றிருக்கிறார். 15 அடி உயரம் கொண்ட இந்த சிலை ஒரே கல்லில் செய்யப்பட்டதாகும். இதேபோல் முன்மண்டபத்தில் செல்வவிநாயகர், அர்த்த மண்டபத்தில் பரிவார தெய்வமாக காலபைரவர் வீற்றிருக்கின்றனர். கோபுரத்துக்குள்ளேயே 36 அடி உயரத்தில் சிவன் சிலை அமைந்திருக்கும்.

பலன்கள்:

இக்கோயிலில் கொடுக்கப்படும் கருங்காலிமாலைகளை அணிவதன் மூலம் திருமண தடை நீங்கும். எதிர்மறை சக்திகள் விலகும். குழந்தை பேறு கிடைக்கும். செல்வம் பெருகும். ராகு, கேது, செவ்வாய் தோஷங்கள் நீங்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.