Asianet News TamilAsianet News Tamil

சாமுத்திரிகா சாஸ்திரம்.. நிலவு ஒரு பெண்ணாகி.. முக அமைப்பு எப்படி .. உங்க குணம் இப்படித்தானாம்!!

மனித உடம்பில் உள்ள உறுப்புகள், முக வடிவத்தை கொண்டு அவனது குணநலன்களை விரிவாக விளக்கும் வகையில் பிருகு முனிவர் எழுதிய நூல், சாமுத்ரிகா லட்சண சாஸ்திரம் ஆகும். வருண தேவனின் மகன் பிருகு முனிவர் தனது தந்தையிடம் கேட்டதை வைத்து சாமுத்திரிகா லட்சணம் என்ற சாஸ்திர நூலை உலகத்திற்கு அளித்துள்ளார். இந்த நூலின் துணைகொண்டு ஒரு மனிதனின் அங்க லட்சணங்களைக் கண்டு அவரின் குணத்தையும் வாழ்க்கையையும் அறிந்துகொள்ளலாம் என ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
 

Samuthrika Latchanam in tamil female face structure and characters
Author
First Published Aug 1, 2024, 12:07 PM IST | Last Updated Aug 1, 2024, 12:07 PM IST

நிலவு முகம்
நிலவு போன்ற அழகிய முக அமைப்பு இது. இப்படியான முக அமைப்பு பெற்றவர்கள் ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாகத் திகழ்வார்கள். பூஜை, விரதங்கள் போன்றவற்றில் ஈடுபாடு அதிகம் இருக்கும். ஒரு பெண் இதுபோன்ற முக வடிவைப் பெற்றிருந்தால், அவள் லட்சியப் பெண்ணாகத் திகழ்வாள். உயர்ந்த மனோபாவத்துடனும், சிறந்த குணத்துடனும் இருப்பாள். இந்த முக வடிவமைப்பு கொண்டவர்ககள் பார்ப்பதற்குச் சாதுவாகத் தோன்றினாலும், இக்கட்டான சூழலில் திறமையோடு சமயோஜிதமாக முடிவு எடுப்பார்கள்.  பெண்ணால் அவளுடைய கணவனுக்கு அதிர்ஷ்டம் வந்துசேரும்.

நீள் சதுர முக அமைப்பு
இத்தகைய முக அமைப்பு பெற்றவர்கள் அடக்கமும், அமைதியும் நிறைந்தவர்களாக விளங்குவார்கள். எதிலும் மெதுவாகச் செயல்படுவார்கள். எந்த விஷயத்திலும் ஒரு தடவைக்குப் பல தடவை யோசித்தே செயல்படுவார்கள். மற்றவர்கள் சொல்லும் அறிவுரைகளை ஏற்றுக்கொண்டாலும், இவர்கள் நிதானமாக யோசித்தே முடிவெடுப்பார்கள். குடும்பத்தில் பணிவுடன் நடந்துகொள்வர், அச்சமற்றவர்கள். தங்கள் கருத்தை தைரியமாக முன்வைக்கக்கூடியவர்கள்.

ஆடி அமாவாசை 2024: சதுரகிரி மலைக்கு இந்த தேதி வரை மட்டுமே செல்ல முடியும்..

முக்கோண வடிவ முகம்
இத்தகைய முக அமைப்பைக் கொண்டவர்கள் புரட்சிகரமானவர்கள். மிகுந்த தந்திரசாலியாக இருப்பார்கள். இந்த நபர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எவராலும் கண்டுபிடிக்க முடியாது. எந்தவித பிரச்னைகளையும் ராஜ தந்திரத்துடன் எதிர்கொண்டு வெல்வார்கள். எளிதில் எவரையும் நம்பமாட்டார்கள். இவர்களின் குழந்தைகள் இவர்களுக்கு அடங்கி நடக்க மாட்டார்கள். இவர்களது வாழ்வில் உயர்வும், வீழ்ச்சியும் சர்வ சாதாரணமாக இருக்கும்.

இதய வடிவ முகம்
இதய வடிவிலான முகத்தை கொண்டவர்கள்  மென்மையானவர்களாக, நல்லுள்ளம் படைத்தவர்களாக, அதீத காதல் உணர்வு கொண்டவர்களாக விளங்குவார்கள். உயர் சிந்தனைகளுடன், நேர்மை தவறாத நடத்தையுடனும், தாய்மை உள்ளத்துடனும் திகழ்வார்கள். வேலை செய்யும் இடத்தில் திறமைசாலிகளாக இருப்பார்கள். இவர்களுக்கு பண வருமானம் அபரிமிதமாக இருக்கும். பணத்திற்கு எப்போதும் பஞ்சமிருக்காது.

ஆடி அமாவாசை 2024 எப்போது? இந்த 1 எளிய தானம் செய்ங்க.. இனி அதிஷ்டம் தான்!
சதுர முக அமைப்பு
இத்தகைய முக அமைப்புடைய ஆண்கள் வீரம் மிகுந்தவர்களாகத் திகழ்வார்கள். எனினும், எளிதில் ஆவேசப்படுவது இவர்களது குறையாக அமையும். எந்தப் பிரச்னையையும் தேக வலிமையைக் கொண்டு தீர்க்க முயற்சிப்பார்கள். இவர்களுக்குக் காதல் திருமணம் ஏற்படும். உறவிலேயே திருமணம் கைகூடி வரவும் வாய்ப்பு உண்டு. எனினும், இவர்களது குடும்ப வாழ்வில் சலசலப்புகள் ஏற்படும். இவர்கள் எந்த விஷயத்திலும் எளிதில் பணிந்து போகமாட்டார்கள். மேலும், இந்த அன்பர்களுக்கு இசையில் ஆர்வமும், அதன் மூலம் பெரும் புகழும் கிடைக்கும்.

முட்டை வடிவ முக அமைப்பு
நடுநிலை இயல்பு படைத்தவர்கள். வீண் பயமும், சுயநலமும் இவர்களிடம் இருக்கும். எல்லோரையும் குறை கூறிக்கொண்டே இருப்பார்கள். நீண்ட ஆயுள் உடையவர்கள். ஆனாலும், வாழ்நாள் முழுவதும் ஏதேனும் நோயுடன் வாழ்க்கையை நடத்துவர்.

தலைகீழ் முக்கோண வடிவம்
தலைகீழ் முக்கோண வடிவத்திலான முகத்தை கொண்டவர்கள் சுறுசுறுப்புடன், திறமைசாலிகளாக இருப்பார்கள். இவர்களின் முகத்தில் கலைத்திறமை பளிச்சிடும். கற்பனை வளம் கொண்ட இவர்களுக்கு படைப்பாற்றல் திறமை அதிகமாக இருக்கும். கலை உலகில் வெற்றி வாய்ப்பு அதிகம்.  ஒரு கலைஞராக, தலைகீழ் முக்கோண வடிவத்திலான முகத்தை கொண்டவர்கள் கோபக்காரர்களாக இருப்பார்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios