வெள்ளிக்கிழமை மாரியம்மன் கோவிலில் இதனை தானமாக கொடுங்கள்! குழப்பமில்லாத ,தெளிவான மனம் கிடைக்கும்.

மனக்குழப்பம் இல்லாத தெளிவான மனம் வேண்டுமென்றால் நாம் என்னென்ன பரிகாரங்கள் செய்யலாம். சிக்கலில் இருந்து விடுபட, சிக்கலை இல்லாத ஆன்மிகம் சார்ந்த எளிமையான வழிபாட்டு முறைகளையும், பரிகாரங்களையும் தான் இந்த பதிவில் நாம் காணலாம்.

Remedies for Getting clarification from Confusion

மனதில் குழப்பங்கள் அதிகமாக இருந்தால் எந்த வேலையையம் நம்மால் கவனம் செலுத்தி வெற்றி பெற முடியாது. மனக்குழப்பம் இல்லாத தெளிவான மனம் வேண்டுமென்றால் நாம் என்னென்ன பரிகாரங்கள் செய்யலாம். சிக்கலில் இருந்து விடுபட, சிக்கலை இல்லாத ஆன்மிகம் சார்ந்த எளிமையான வழிபாட்டு முறைகளையும், பரிகாரங்களையும் தான் இந்த பதிவில் நாம் காணலாம்.

சில பேர் வாழ்வில் குழப்பங்கள் நிறைந்து காணப்படும். எப்போதும் குழப்பத்துடன் , மனது தெளிவு இல்லாமல், கலங்கிய குட்டையில் மீன்பிடிக்க இயலாது. உங்களுடைய குழப்பமாக இருப்பின் இந்த பதிவு உங்களுக்கு உதவும்.

மனக்குழப்பம் நீங்க இரண்டு வெள்ளிக்கிழமை அதாவது 2 வாரங்களில் 2 வெள்ளிக்கிழமை தினத்தன்று இதனை செய்தால் போதும். வீட்டில் சுத்தமான பசும்பால் வாங்கி அதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் போட்டு மணக்க மணக்க காய்ச்சு அதனை அருகில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு எடுத்து சென்று அதனை மாரிஅயம்மன் பாதத்தில் வைத்து பின் அதனை நெய்வேத்தியமாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தானமாக கொடுக்காலம்.

வெள்ளிக்கிழமையன்று பால் சம்மந்தமான பொருட்களான பால் சாதம், பால் பாயசம் போன்றவற்றை தானம் செய்தால் மனக்குழப்பம் தீரும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. எனினும் பால் தானமாக கொடுப்பது மிகச்சிறப்பான ஒன்றாகும் . இவ்வாறு செய்து வந்தால் உங்களுடைய  குழப்பங்கள் நிச்சயமாக தீரும். 

இட்லி மாவு இல்லைனா என்னங்க , 1 தடவ இப்படி கோதுமை மாவு வைத்து இட்லி செய்து சாப்பிடுங்க!

உங்களால் முடிந்த வரை, உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஜீவ சமாதிகளுக்கு சென்று இரண்டு தீபங்கள் ஏற்றி வைத்து விட்டு 10 நிமிடங்கள் அங்கே அமர்ந்து தியானம் செய்ய வேண்டும். மனக்குழப்பம் உடனடியாக நீங்கும். திக்கு தெரியாமல் தவித்து கொண்டிருக்கும் குழப்பங்களுக்கு ஒரு நல்ல தீர்வை தருவது தியானம் தான்.

இந்த தியானத்தை வியாழக்கிழமை செய்யலாம். அப்படியில்லைஎன்றால் வெள்ளிக்கிழமை செய்யலாம். வாய்ப்புள்ளவர்கள் ஏதேனும் ஒரு அருவிக்கு சென்று குளித்து விட்டு வாருங்கள். நீஎர்வீழ்ச்சிக்கு சென்று குளித்து விட்டு வருவது மனபாரத்தை குறைக்கும். மனதை தெளிவுபடுத்தும். அருவியில் குளிக்க முடியாதவர்கள் ஐந்து நிமிடம் அமர்ந்து நீர்வீழ்ச்சியை பார்த்தாலே மனதிற்கு நிம்மதி.

கடலோரங்களில் காணப்படும் மீனவர்களுக்கு, மீன் விற்பவர்களுக்கு ஏதாவது கஷ்டங்கள் இருப்பது தெரியவந்தால் , உதவி செய்ய வாய்ப்பு கிடைத்தால் அந்த உதவியை செய்வதன் மூலமும் மனக்குழப்பம் தீரும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சமுத்திரத்திற்க்கு சென்று தலைக்கு குளித்து வந்தால் மனப்பாரம் குறையும்.

இப்படியாக இந்த எளிய பரிகாரங்களில் உங்களால் எதை செய்ய முடியுமோ அதை செய்யுங்கள். ஏதாவது ஒன்றை செய்தாலும் நம்பிக்கையோடு செய்ய வேண்டும். நிச்சயமாக மனப்பாரம் குறைந்து தெளிவு பெறுவீர்கள். வாழ்வில் இன்பமாக வாழ்வீர்கள் என்ற கருத்தோடு இந்த பதிவு இனிதே நிறைவு பெறுகிறது

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios