Asianet News TamilAsianet News Tamil

அரசு செலவில் ராமேஸ்வரம் - காசி ஆன்மீக சுற்றுலா.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..

ராமேஸ்வரம் – காசி ஆன்மீக பயணத்தில் 300 பேரை அழைத்து செல்ல இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.

Rameswaram to Kashi spiritual journey tn hindu religious dept announcement Rya
Author
First Published Nov 20, 2023, 1:31 PM IST | Last Updated Nov 20, 2023, 1:59 PM IST

இந்துசமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் “ 2022-20023-ம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக்கோரிக்கை அறிவிப்பில் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் இருந்து காசி விஸ்வநாத சுவாமி கோயிலுக்கு 200 பேர் ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள். அதற்கான செலவின தொகையான ரூ.50 லட்சம் பணத்தை தமிழக அரசே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 2022-23-ம் நிதியாண்டில் 200 பேர் காசிக்கு ஆன்மீக பயணமாக அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து 2023-2024-ம் ஆண்டுக்கான அறிவிப்பில் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் இருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு 300 பேர் அழைத்து செல்லப்படுவர் என்றும், அதற்கான செலவின தொகையான ரூ.75 லட்சத்தை அரசே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அதன்படி அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில் தலா 15 பேர் வீதம், மொத்தம் 300 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்ப படிவங்களை மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். இந்த ஆன்மீக பயணத்திற்கான 300 பேரை தேர்வு செய்வதற்காக இன்றுடன் முடிவடைய உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Governor RN Ravi : 2 வருடமாக ஆளுநர் என்ன செய்து கொண்டு இருந்தார்.? தமிழக அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி

இந்த ஆன்மீக பயணத்திற்கு இன்றைக்குள் (20.11.2023)-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பயணத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்களாகவும், இறை நம்பிக்கை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஆன்மீக பயணத்திற்கு தேர்வு செய்யப்படுவர். மேலும் 60 வயது முதல் 70 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios