Asianet News TamilAsianet News Tamil

ரம்ஜான் 2023 கொண்டாட்டம் எப்போது? இன்றைய தினம் பிறை பார்க்க முடியுமா? முழுதகவல்கள்!!

ramadan 2023: ரம்ஜான் எப்போது கொண்டாடப்படவுள்ளது என்ற முழுவிவரம்.. 

Ramadan 2023 date India to celebrate Eid on this date
Author
First Published Apr 21, 2023, 10:32 AM IST | Last Updated Apr 21, 2023, 10:32 AM IST

ரம்ஜான் எனும் ரமலான் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாம் மக்களால் விமரிசையாகக் கொண்டாடப்படும். இஸ்லாமிய நாள்காட்டியின் 9ஆவது மாதமான ரமலான் மாதம் பிரார்த்தனை, நோன்பு, பிரதிபலிப்பு, ஈகை ஆகியவற்றை வெளிப்படுத்தும் மாதம். இந்த மாதத்தில் ஈகை பண்பை வளர்க்க இஸ்லாம் அறிவுறுத்துகிறது. அன்பு, உதவி, கருணை திருகுரானை ஓதுதல், தொழுகை, நோன்பு ஆகியவை ரமலான் மாதத்தில் நோக்கமாக கொள்ள வேண்டும். 

தற்போது ரமலான் மாதம் முடிவை நெருங்கியுள்ள இந்த நிலையில், ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தின் உற்சாகம்  தொடங்கிவிட்டது. இஸ்லாமிய நாள்காட்டியின் ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் பிறையை வெள்ளிக்கிழமையான இன்று பார்க்கலாம் என ஜமாத்துல் உலமா சபை அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பல பள்ளிவாசல் செயல்பாடுகள் மற்றும் இஸ்லாமிய உலமாக்களின் தலைமை இடமாக இருப்பது ஜமாத்துல் உலமா சபை. இது கொடுக்கும் அறிவுறுத்தல்களின் படி தான் பல மசூதிகள் உலமாக்களின் செயல்பாடுகள் இருக்கும். 

ரம்ஜான் 2023 எப்போது? 

அப்படியான வழிகாட்டலில் தான் ஈகைத் திருநாள் (Eid al-Fitr) ஏப்ரல் 21ஆம் தேதி கொண்டாட வேண்டும் என ஜமாத்துல் உலமா சபை அறிவுறுத்தியுள்ளது. இந்தாண்டு பிறை தோன்றியதன் அடிப்படையில் சில நாடுகளில் ரமலான் மாதம் மார்ச் 24ஆம் தேதி தொடங்கியது. ஆகவே  ரமலான் மாதம் ஏப்ரல் 21ஆம் தேதி நிறைவடைவதாக சொல்லப்படுகிறது.  இன்றைய தினம் பிறை தெரிந்த பின்னர், இஸ்லாமிய நாட்காட்டியின் 10ஆவது மாதமான ஷவ்வால் மாதத்தின் தொடக்க நாளான ஏப்ரல் 22ஆம் தேதியன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. 

இருப்பினும் ரம்ஜான் பண்டிகையை ஏப்ரல் 21ஆம் தேதியான இன்று கொண்டாட வேண்டுமா? அல்லது ஏப்ரல் 22 ஆம் தேதியா என்ற குழப்பம்  பலருக்கும் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிறை தெரிவதை பொறுத்து தலைமை ஹாஜி அறிவிப்பார் என்பது தான் வழக்கம். ஆனாலும், எப்போது ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது, எந்த நாளில் ரம்ஜான் பண்டிகை விடுமுறை என்ற குழப்பம் நிலவி வருகிறது. 

இந்தியாவை பொறுத்தவரை, ரம்ஜான் பண்டிகை பிறை தெரிவதன் அடிப்படையில் மட்டுமே கொண்டாடப்படுவதால், இங்கு எப்போதும் தேதி மாறுபடும். கத்தார், சவுதி அரேபியா ஆகிய அரபு நாடுகளில் ஏப்ரல் 20ஆம் தேதியே பிறை தெரிந்து கொண்டாட்டங்களும் ஆரம்பித்துவிட்டன.  இந்தியாவில் ஏப்ரல் 21ஆம் தேதியான இன்று பிறை தெரிந்து, ஏப்ரல் 22ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படலாம் என்பதே தற்போதைய நிலவரம். இந்தியாவிலும் கேரள மாநிலத்தில் மட்டும், சவுதி அரேபியாவில் ரம்ஜான் கொண்டாடப்படும் நாள் அடிப்படையில் ரம்ஜான் கொண்டாடும் வழக்கம் வைத்திருக்கிறார்கள். 

இதையும் படிங்க: கோடையில் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடிக்கலாமா? அது நல்லதா!

இதையும் படிங்க:தேயிலையை தலைமுடிக்கும் கூட பயன்படுத்துவாங்க.. தலைமுடி அசுர வேகத்தில் நீளமா அடர்த்தியா வளர! இத ட்ரை பண்ணுங்க!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios