Vinayagar slogan: விநாயகப் பெருமானின் புகழ்பெற்ற ஸ்லோகங்களான ஐந்து கரத்தனை, கஜானனம் பூத கணாதி போன்றவை தொகுக்கப்பட்டுள்ளன. மேலும், பிள்ளையார் வணக்கம், விநாயகர் காப்புப் பாடல், தொந்தி கணபதி பாடல் போன்ற பக்திப் பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

விநாயகர் ஸ்லோகம்

1. ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்

புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

2. கஜானனம் பூத கணாதி ஸேவிதம்

கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்

உமாஸுதம் சோக வினாச காரணம்

நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

3. சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்

ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

4. ஓம் தத்புருஷாய வித்மஹே

வக்ரதுண்டாய தீமஹி

தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

5.அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த

தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல

குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும்

கணபதியைக் கைதொழுதக் கால்.

6. மூஷிக வாகன மோதக ஹஸ்த

சாமர கர்ண விளம்பித சூத்ர

வாமன ரூப மஹேஸ்வர புத்ர

விக்ன விநாயக பாத நமஸ்தே.

7. வக்ரதுண்டாய ஹீம்

ஓம் நமோ ஹேரம்ப மதமோதித

மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா

ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ 

பிள்ளையார் வணக்கம்

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்

பிள்ளையார் பிள்ளையார் அருளைத் தரும் பிள்ளையார்

ஆற்றங்கரை ஓரத்திலே அரசமரத்து நிழலிலே

வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்

ஆறுமுக வேலவனின் அண்ணனான பிள்ளையார்

நேரும் துன்பம் யாவையும் தீர்த்து வைக்கும் பிள்ளையார்

மஞ்சளிலே செய்திடினும் மண்ணினாலே செய்திடினும்

அஞ்செழுத்து மந்திரத்தை நெஞ்சில் காட்டும் பிள்ளையார்

அவல்பொரி கடலையும் அரிசி கொழுக்கட்டையும்

கவலையின்றி உண்ணுவார் கண்ணைமூடித் தூங்குவார்.

கலியுகத்தின் விந்தையைக் காண வேண்டி அனுதினம்

எலியின் மீது ஏறியே இஷ்டம் போலச் சுற்றுவார்.

விநாயகர் காப்புப் பாடல்

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச்

சங்கத் தமிழ் மூன்றுந்தா

தொந்தி கணபதி பாடல்

தொந்தி கணபதி வா வா வா

வந்தே ஒரு வரம் தா தா தா

கந்தனின் அண்ணா வா வா வா

கனிவுடன் ஒரு வரம் தா தா தா

பானை வயிற்றுடன் வா வா வா

பணிந்தேன் ஒரு வரம் தா தா தா

குள்ள குள்ளனே வா வா வா

குண்டு வயிறனே வா வா வா

ஆனை முகத்துடன் வா வா வா

அவசியம் ஒரு வரம் தா தா தா

எல்லாம் அறிந்த கணபதியே

எவ் வரம் கேட்பேன் தெரியாதா

நல்லவன் என்னும் ஒரு பெயரை

நான் பெறவே வரம் தா தா தா