Tamil

அகல் விளக்கு அதிக எண்ணெய் குடிக்காமல் எரிய சூப்பர் டிப்ஸ்!

பண்டிகைக்கு வாங்கிய மண் அகல் விளக்குகளில் உடனே எண்ணெய் ஊற்றி ஏற்றிவிடாதீர்கள். அதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது, அது என்ன தெரியுமா?
Tamil

விளக்கு சீக்கிரம் அணைந்துவிடும்

புதிய விளக்கில் நேரடியாக எண்ணெய் ஊற்றினால், காய்ந்த மண் பாதிக்கும் மேல் எண்ணெயை உறிஞ்சிவிடும். இதனால், விளக்கு நீண்ட நேரம் எரியாமல் சீக்கிரமே அணைந்துவிடும்.
Image credits: AI image
Tamil

முதலில் தண்ணீரில் ஊறவைங்க

அகல் விளக்குகளை ஏற்றுவதற்கு முன்பு, குறைந்தது 2 மணி நேரம் (அல்லது இரவு முழுவதும்) தண்ணீரில் மூழ்கவைத்து ஊறவிடுங்கள்.
Image credits: AI image
Tamil

இது எப்படி வேலை செய்யுது?

மண்ணில் உள்ள சிறிய துளைகள் தண்ணீரை உறிஞ்சிக்கொள்ளும். இதனால், விளக்கு எண்ணெயை உறிஞ்சுவதற்கு இடமே இருக்காது. அதனால் எண்ணெய் வீணாகாது.
Image credits: AI image
Tamil

கவிழ்த்து வைத்து காயவைங்க

தண்ணீரிலிருந்து எடுத்த பிறகு, அகல் விளக்குகளை ஒரு துணியின் மீது தலைகீழாகக் கவிழ்த்து வைத்து, ஈரம் போகும் வரை நன்கு காயவிடுங்கள்.
Image credits: AI image
Tamil

நீண்ட நேரம் எரியும் தீபம்

இப்போது எண்ணெய் அல்லது நெய் ஊற்றி விளக்கேற்றுங்கள். அகல் விளக்கு எண்ணெயைக் குடிக்காது, தீபம் இரவு முழுவதும் நிதானமாக எரியும். 

Image credits: AI image

Gen Z Lesson : Gen Z-களுக்கு தசாவதாரம் கற்றுத்தரும் 10 வாழ்க்கை பாடங்கள்!

Vastu Tips: பணம் பெருக கிச்சனில் இரவில் இந்த 3 விஷயங்களை செய்யுங்கள்!

Peacock: இந்த 4 இடங்களில் மயிலிறகை வைத்தால் போதும், அதிர்ஷ்டம் வரும்

Kumbhakarna : கும்பகர்ணன் ஏன் 6 மாத தூங்கினார்? பின்னணியில் தேவ ரகசியம்!