6 வாரங்கள் இந்த கோவிலுக்கு போயிட்டு வாங்க திருமணம்,மகப்பேறு,வேலை வாய்ப்பு, பதவி அனைத்தும் உங்கள தேடி வரும்
பழமையான திருத்தலங்களில் ஒன்றான வள்ளி - தெய்வானை உடனாய சுப்பிரமணிய சுவாமி திருக் கோவில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரம்பூரில் இருக்கிறது. அங்குள்ள தெய்வங்கள் மற்றும் வழிபாடுகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
இந்த திருத்தலத்தில் அமைந்துள்ள முருகனை வழிபாடு செய்து வந்தால் விரைவில் திருமணத் தடை நீங்கும். மகப் பேறு கிடைக்கப்பெறுவவார்கள். இப்படி வேண்டிக் கொண்ட பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறிய பின் நேர்த்திக் கடனை செலுத்தி வழிபாடு செய்கிறார்கள்.
மிகப்பழமையான திருத்தலங்களில் ஒன்றான வள்ளி - தெய்வானை உடனாய சுப்பிரமணிய சுவாமி திருக் கோவில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரம்பூரில் இருக்கிறது. அங்குள்ள தெய்வங்கள் மற்றும் வழிபாடுகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
சூரபத்மனால் உருவாக்கப்பட்ட கந்த புஷ்கரணியை தல தீர்த்தமாக பெற்றது. சூரபத்மன் மயிலாக வந்து முருகபெருமானை வழிபாடு செய்து ஞான உபதேசம் பெற்ற தலமாகும். ஆறுமுகங்களுடன் காட்சி அளிப்பதால் ,ஆறுபடை வீடுகளையும் ஒன்றாக வழிபட்ட பலனை தரக்கூடிய ஆலயமாகும். அகத்தியர் வழிபட்ட திருத்தலங்களில் ஓன்றாகும். பிரம்பு என்ற முள் செடியை தல விருட்சமாகக் பெற்ற ஆலயமாகும்.
இந்த கோவிலில் அமைந்துள்ள முருகப்பெருமானை தொடர்ந்து 6 வாரங்கள் 6 விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி, சிவப்புநிற பூக்கள் கொண்டு அர்ச்சனை செய்து வந்தால் திருமணத் தடை நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த ஆறுமுக முருகப் பெருமானை வழிபாடு செய்து வர விரைவில் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.
மேலும் வேலை தேடி அலைபவர்கள் இந்த முருகனை மனமுருகி பிரார்த்தனை செய்தால் மிக விரைவில் வேலை கிடைக்கும் தவிர உத்யோகத்தில் பதவி உயர்வுக்காக முயற்சி செய்பவர்கள் பெரிய அளவிலான பதவி கிடைக்க பெறுவீர்கள். வேண்டுதல்கள் நிறைவேறிய பிறகு இந்கு வரும் பக்தர்கள், முருகனுக்கு காவடி , பால் அபிஷேகம், சந்தன அலங்காரம் போன்றவை செய்து நேர்த்திக் கடனை செலுத்துகிறார்கள்.
இங்கு சிவபெருமான், குபேர திசையில் அமைந்துள்ளார். திங்கட்கிழமை, பிரதோஷம் மற்றும் சிவராத்திரி ஆகிய தினங்களில் வில்வம் வைத்து வழிபாடு செய்து வர கடன் சுமை நீங்கும் என்று கூறப்படுகிறது . தவிர சொந்த தொழில் செய்பவர்கள் அபிவிருத்தி அடைந்து அதிக லாபம் அடைவார்கள்.
இத் திருக்கோயிலில் அமைந்துள்ள துர்க்கையம்மன் பெரும் சக்தி பெற்றவள். சாந்த துர்க்கையாக காணப்படும் துர்க்கைக்கு செவ்வாய் ,வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு கால பூஜை வெகு விமரிசையாக செய்யப்டுகிறது . ஆண்டு தோறும் தை மாத இறுதி ஞாயிற்றுக்கிழமையில் 501 திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. இந்த பூஜையில் பங்கேற்றால் சகல பலன்களும் கிடைப்பதாக கூறுகின்றனர்.
தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12 மணிக்கு சாத்தப்படுகிறது. மீண்டும் மாலை 4.30 மணி நடை திறந்து இரவு 8.30க்கு நடை சாத்தப்படும். வாய்ப்பு இருப்பவர்கள் இங்கு சென்று வழிபட்டு முருகன் ஆசியால் அனைத்தும் கிடைக்க பெற்று நீடுழி வாழ்வீர்கள்!
நெற்றியில் விபூதியை மோதிர விரலால் வைத்துக் கொள்வதற்கான காரணம் என்ன? மற்ற விரல்களில் விபூதி வைத்தால்?