நடிகை காஞ்சனா தானமாக கொடுத்த 6 கிரவுண்ட் இடத்தில் கட்டப்பட்ட பத்மாவதி தாயார் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை!
திருப்பதிக்கு நடிகை காஞ்சனா தானமாக கொடுத்த 6 கிரவுண்ட் இடத்தில் கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பழம்பெரும் நடிகை காஞ்சனா தி நகர், ஜிஎன் செட்டியில் உள்ள தனக்கு சொந்தமான 6 கிரவுண்ட் இடத்தை திருமலை தேவஸ்தானத்திற்கு தானமாக கொடுத்தார். அவர் கொடுத்த இடத்தில் பத்மாவதி தாயாருக்கு கோயில் கட்டுவது என்று தேவஸ்தானம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளும் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சுவாமிகள் பத்மாவதி தாயாருக்கு கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
கோவையில் கடந்த சில நாட்களாக போக்கு காட்டி வந்த மக்னா யானை பிடிபட்டது
தற்போது பத்மாவதி தாயாருக்கு கோயில் கட்டும் பணிகள் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் முடிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் மார்ச் மாதம் 17 ஆம் தேதி மகாகும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக துவஜஸ்தம்பம் எனும் கோயில் கொடிமரம் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான (டிடிடி) தமிழக ஆலோசனைக்குழு தலைவர் சேகர் ரெட்டி, டிடிடி இணை செயலாளர் வீரபிரம்மம் ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழக ஆலோசனைக்குழு தலைவர் ஏஜே சேகர் ரெட்டி கூறியிருப்பதாவது: திருப்பதி அடுத்துள்ள திருச்சானூர் போன்று திநகர் பகுதியில் பத்மாவதி தாயார் கோயில் கட்டப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 6 கிரவுண்ட் இடத்தில் பத்மாவதி தாயாருக்கு 3 கிரவுண்ட் இடத்தில் கோயிலும், மீதமுள்ள 3 கிரவுண்ட் இடத்தில் மடப்பள்ளி, சுவாமி வாகனங்கள் வைக்க இடம், புஷ்கரணி ஆகியவையும் கட்டப்பட்டுள்ளன.
ரூ.7 கோடியை தாண்டிய பழனி முருகனின் உண்டியல் வருவாய்!
பத்மாவதி தாயார் கோயில் கட்டுமான பணிகள் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் பூர்த்தியடைந்த நிலையில், இன்று கோயில் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் வைக்கப்படும் மூலவர் பத்மாவதி தாயார் சிலையானது திருப்பதியில் வடிக்கப்பட்டுள்ளது. விரைவில் பத்மாவதி தாயார் சிலையானது சென்னைக்கு கொண்டு வரப்பட்டு வரும் மார்ச் 17 ஆம் தேதி மகாகும்பாபிஷேகம் நடத்த முடிவு செயப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.