Asianet News TamilAsianet News Tamil

மக்கள் வெள்ளத்தில் நங்கவள்ளி லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம் தொடங்கியது..!

பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படக்கூடிய சுமார் 800 ஆண்டுகள் பழமையான லட்சுமி நரசிம்மர் மற்றும் சோமேஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி உத்திரம் தேர் திருவிழா கடந்த 17ம் தேதி துவங்கியது. 

Nangavalli Lakshmi Narasimha temple chariot tvk
Author
First Published Mar 27, 2024, 9:20 AM IST

நங்கவள்ளி லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஐந்து நாள் நடைபெறும் பங்குனி உத்திரம் தேரோட்டம் வெகு விமர்சியாக துவங்கியது.

பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படக்கூடிய சுமார் 800 ஆண்டுகள் பழமையான லட்சுமி நரசிம்மர் மற்றும் சோமேஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி உத்திரம் தேர் திருவிழா கடந்த 17ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஐந்து நாள் நடைபெறக்கூடிய தேரோட்டம் துவங்கியது.

இதையும் படிங்க: இந்த 5 ராசிக்காரர்களை கல்யாணம் பண்ண கொடுத்து வச்சிருக்கணும்.. ஏன் தெரியுமா.. ?

அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். முதல் நாளாக கோவில் நிலையில் இருந்து சேலம் செல்லும் வரை உள்ள பகுதிக்கு தேரோட்டம் நடைபெற்றது. இரண்டாவது நாளாக இன்று அங்கிருந்து நங்கவள்ளி பஸ் நிலையம் அருகே உள்ள கிராம சாவடி வரை இழுத்துச் செல்லப்படும் ஐந்தாவது நாள் தேரோட்டமாக வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. ஏப்ரல் இரண்டாம் தேதியுடன் பங்குனி உத்திர தேரோட்டத் திருவிழா நிறைவு பெறுகிறது.

இதையும் படிங்க: காலில் கருப்பு கயிறு கட்டினால் தீய சக்தி நெருங்காதா.. கண் திருஷ்டி நீங்குமா..? உண்மை என்ன..??

Follow Us:
Download App:
  • android
  • ios