Nallathukudi Alanthurayappar Temple is Best Remedy for husband wife unity : கணவன் மனைவி ஒற்றுமைக்கு வழிபட வேண்டிய முக்கியமான சிவன் கோயிலானது மயிலாடுதுறை மாவட்டம் நல்லத்துக்குடி என்ற ஊரில் உள்ளது. அந்த கோயிலைப் பற்றி பார்க்கலாம்.

நல்லத்துக்குடி ஆலந்துறையப்பர் கோயில் என்பது மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்; இது தேவாரப் பாடல் பெற்ற வைப்புத்தலம். மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோயிலின் ஐயாறப்பர், அப்பர், சம்பந்தர் போன்ற சுவாமிகள் எழுந்தருளும் சப்தஸ்தான விழாவில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு பழமையான சிவத்தலம்.

கோயிலின் சிறப்புகள்:

கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம். அதனை அடுத்து உயர்ந்த கொடிமரமும், நான்கு திக்கை நோக்கு நாள் வேத நந்தியும் மையத்தில் பலிபீடமும் உள்ளது. அதற்கு அடுத்து இறைவனை நோக்கி அதிகார நந்தி உள்ளது. கோயிலின் முகப்பு பெரிய அரண்மனையை நினைவூட்டும்விதமாய் உயர்ந்த வாயில் கொண்ட மண்டபமும், எட்டு பட்டை கொண்ட கூம்பு வடிவ விதானமும் அழகுடையது. அடுத்து பல தூண்கள் கொண்ட மகாமண்டபம், அதில் சப்த மாதர், சப்த நாகர், மகா கணபதி ஆகியோரும், மங்களநாயகி எனும் அம்பிகையும் உள்ளனர். முகப்பு மண்டபத்தில் தெற்கு நோக்கிய அம்பிகை திருக்கோயில் உள்ளது.

வரலாறு:

வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சகன் எனும் மூன்று அசுரர்களும் மூன்று பறக்கும் கோட்டையாக மாறி தேவர்களை அழிக்க முற்பட, இறைவன் அந்த முப்புரங்களையும் இத்தலத்தில்தான் எரித்ததாகக் கூறப்படுகிறது. தேவர்கள் தங்களால்தான் முப்புரங்களும் அழிக்கப்பட்டன என செருக்குடன் அலைய, பிரம்மா, திருமால் இருவரை தவிர அனைவரையும் சிவன் தன் அக்னியால் எரிக்க, இருரைத் தவிர மற்றெல்லாம் சாம்பலாக இருவரும் வருத்தமடைந்து இறைவனை வேண்ட, இறைவனும் ருத்ர வடிவில் வந்து லிங்க வடிவில் இருக்கும் தன்னை எவ்வாறு வழிபடுவது என லிங்கத்தை பிரதிஷ்டை செய்து எவ்வாறு லிங்க வழிபாடு செய்யவேண்டும் எனக் கற்றுக் கொடுத்ததால், இவர் மார்க்கசகாயர் என அழைக்கப்பட்டார்.

வழிபாடு:

ஆலந்துறை அப்பர் கோயிலுக்கு சென்று வந்தால் விரைவில் பாவங்களை நீக்கி வாழ்வில் முன்னேறலாம் என்று கருதப்படுகிறது உடம்பில் இருக்கும் பிரச்சனை மனதில் இருக்கும் பிரச்சனையானது நன்மை தருவார் என்றும் கருதப்படுகிறது சிவனும் விஷ்ணுவும் ஒரே இடத்தில் சங்கமிப்பதால் இதுவரை பார்க்க முடியாத பெரும் கோவில் இங்கு இருப்பதாக கூறப்படுகிறது. பழமையான கோயில் என்றும் கருதப்படுகிறது. கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனையும் தீர்ந்து இருவரும் வாழ்க்கையில் முன்னேறலாம் என்றும் கூறப்படுகிறது.