சேலம் கோரிமேட்டில் உள்ள குருத்ரேஸ்வரர் ஆலயத்தின் மகிமை என்ன? கடன் தொல்லையிலிருந்து விடுபட இங்கு எப்படி வழிபட வேண்டும் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சேலம் கோரிமேடு ருத்ரேஸ்வரர் ஆலயம் என்பது, என்.ஜி.ஜி.ஓ காலனியில் அமைந்துள்ள சக்திவாய்ந்த சிவன் கோயிலாகும். கடன் பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு இந்த கோயிலை சிறந்த கோயிலாக கருதப்படுகிறது இதனை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். வரலாறு: ஒரு சமயம் தேவர்களை துன்புறுத்திய அசுரர்களை அழிப்பதற்காக சிவபெருமான் தன் திருமேனியில் இருந்து ஒரு கோடி ருத்திரர்களை தோற்றுவித்தார். அவர்கள் அசுரர்களுடன் போரிட்டு, அவர்களை அழித்தனர். அசுரர்களைக் கொன்ற பாவம் தீர்க்க சிவபெருமானை வேண்டி நின்றனர். 

 அவர்கள் திருக்கழுக்குன்றம் தலத்தில் தனித்தனியே சிவபூஜை செய்தால் பாவம் விலகும் என்று சிவபெருமான் அருளினார். ஒரு கோடி ருத்திரர்களும் திருக்கழுக்குன்றம் தலத்தில் தனித்தனியே சிவலிங்கம் அமைத்து, அபிஷேக ஆராதனை செய்தனர். பூஜையின் முடிவில் ஒரு கோடி லிங்க உருவத்தையும் தன்னுள் அடக்கி சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக இத்தலத்தில் எழுந்தருளினார்.கோடிருத்திரர்களின் வேண்டுகோளுக்கிணங்க, இறைவனின் திருநாமம் ருத்ரகோடீஸ்வரர் எனவும், தலம் ருத்ர கோடி தலம் எனவும் ஆயிற்று.

வழிபாடு: 

நாம் இத்தலத்தில் ஒரு முறை தானம் செய்தாலும், வழிபாடு செய்தாலும் அது கோடி முறை செய்ததற்கு ஈடான பலனைத் தரும். கோடி ருத்திரர்கள் சிவராத்திரி வழிபாடு செய்த தலம் என்பதால், சிவராத்திரியன்று இங்கு வழிபடுவது சிறந்த பலன்களை கொடுக்கும். கடன் பிரச்சனையிலிருந்து தீர்வதற்கு இங்கு வந்து வேண்டிக் கொண்டால் பிரிவில் கடன் தீர்ந்து நல்வழி பிறப்பும் என்று கூறப்படுகிறது.

சுயம்புலிங்கம்: 

இது சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாகக் கருதப்படுகிறது.இங்குள்ள சிவபெருமான் 'ருத்ரேஸ்வரர்' என்ற பெயரில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.ருத்ரேஸ்வரர் மற்றும் அம்பாள் சன்னதிகளுடன், விநாயகர், முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி மற்றும் நவக்கிரகங்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.