Asianet News TamilAsianet News Tamil

நாக பஞ்சமி 2024 எப்போது? நாகங்களை இப்படி வழிபடுங்க.. எப்பேர்ப்பட்ட தோஷங்களும் நீங்கும்!

Naga Panchami 2024 : இந்த 2024 ஆம் ஆண்டு நாக பஞ்சமி எப்போது வருகிறது? அதன் சிறப்புகள் மற்றும் முக்கியத்துவம் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

naga panchami 2024 date time significance and puja method in tamil mks
Author
First Published Aug 7, 2024, 12:40 PM IST | Last Updated Aug 7, 2024, 1:20 PM IST

ஆடி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் வரும் பஞ்சமி நாக பஞ்சமி ஆகும். இந்தியா முழுவதும் குறிப்பாக வட மாநிலங்களில் இந்நாள் மிகவும் பிரசித்தி பெற்ற நாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் விரதம் இருந்து வழிபட்டால், எப்பேர்பட்ட தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டு நாக பஞ்சமி எப்போது வருகிறது? அதன் சிறப்புகள் மற்றும் முக்கியத்துவம் என்ன? நாகப்பஞ்சமி விரதத்தின் சிறப்பு மற்றும் வழிபடும் முறை குறித்து விரிவாக இந்த கட்டுரையில் நாம் விரிவாக பார்க்கலாம்.

2024 நாக பஞ்சமி எப்போது?
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் சுக்ல பஷத்தின் 5வது நாளில், அதாவது வளர்பிறை பஞ்சமி அன்று தான் நாக பஞ்சமி வருகின்றது. அந்த வகையில், இந்த 2024 ஆம் ஆண்டு நாக பஞ்சமி ஆகஸ்ட் 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. இந்த ஆண்டு வரும் நாக பஞ்சமி ஆனது வெள்ளிக்கிழமை அன்று வருவதால் மிகவும் விசேஷமாகும்.

இதையும் படிங்க:  நாக பஞ்சமி 2024: தேதி, வழிபடுவதற்கான உகந்த நேரம் பற்றி தெரியுமா?

நாக பஞ்சமி விரதத்தின் சிறப்பு என்ன?
இந்து புராணங்கள் மற்றும் சாஸ்திரங்கள் படி, பாம்புகள் பல தெய்வங்களுக்கு ஆபரணங்களாகவும், வாகனமாகவும் இருந்தது. அதுமட்டுமின்றி பாம்புகள் மனிதர்களை விட சக்தி வாய்ந்தவர்கள் என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது. குறிப்பாக, ஜாதகத்தில் இருக்கும் ராகு மற்றும் கேது சர்ப்ப கிரகங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு கிரகங்களால் கால சர்ப்ப தோஷம், நாக தோஷம் ஏற்படும். ஆகையால், இந்த இரண்டு தோஷங்களையும் போக்க நாக பஞ்சமி அன்று விரதம் இருந்து நாகங்களை வழிபட வேண்டும். மேலும், நாகங்களை ஆபரணங்களாகவும், வாகனமாகவும் வைத்திருக்கும் கடவுள்களை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

இதையும் படிங்க:  சகல பாவங்களையும் போக்கும் நாக பஞ்சமி.. எந்த ராசிக்காரர்கள் என்ன செய்ய வேண்டும்?

நாக பஞ்சமி அன்று வழிபடும் முறை: 
நாகபஞ்சமி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி கோவில்களில் இருக்கும் நகங்களுக்கு பூஜை செய்து, பால் அபிஷேகம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் நாக தோஷம் நீங்கும் என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றது. ஒருவேளை உங்களால் நாகங்களுக்கு அபிஷேகம் செய்ய முடியவில்லை என்றால், அம்மன் கோவிலில் இருக்கும் பாம்பு புற்றுக்கு பால் ஊற்றவும். பிறகு தேங்காய், மஞ்சள், வெற்றிலை, பாக்கு, கற்பூரம் ஆகியவற்றை கொண்டு பூஜை செய்து வழிபடலாம். நாகபஞ்சமி அன்று ராகு காலத்தில் பூஜை செய்து வழிபடுவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. வெள்ளிக்கிழமை முழுவதும் நாகபஞ்சமி திதி இருப்பதால் உங்களுக்கு விருப்பமான நேரத்தில் கோவிலுக்கு சென்று, விளக்கேற்றி வழிபடுங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios