நாக பஞ்சமி 2024: தேதி, வழிபடுவதற்கான உகந்த நேரம் பற்றி தெரியுமா?
Naga Panchami 2024 : நாக பஞ்சமியின் முக்கியத்துவம் மங்களகரமான நேரம் மற்றும் வழிபாட்டு முறை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நாக பஞ்சமி பண்டிகை இந்து மதத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். நாக கடவுள்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த பண்டிகையானது, சனாதன தர்மத்தின் படி, சவான் மாதத்தின் சுக்ல பஷாவின் 5வது நாளில் கொண்டாடப்படுகிறது.
நாக பஞ்சமி அன்று நாக தேவதைகளை வழிபட்டால், நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். அதுமட்டுமின்றி இந்த நாளில் சித்தி யோகமும் ரவியோகமும் சேர்ந்தே வருவதால், இந்த ஆண்டு நாக பஞ்சமியானது கூடுதல் விசேஷமானது என்றே சொல்லலாம்.
அந்த வகையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நாக பஞ்சமி வருகிறது. நாக பஞ்சமி திதியானது வெள்ளிக்கிழமை அதிகாலை 12.36 மணிக்கு தொடங்கி சனிக்கிழமை அதிகாலை 3.14 மணிக்கு முடிவடையும்.
நாக பஞ்சமி அன்று, அதாவது ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 5.47 மணி முதல் 8.27 மணி வரை தான் வழிபடுவதற்கான உகந்த நேரமாகும்.
இதையும் படிங்க: சகல பாவங்களையும் போக்கும் நாக பஞ்சமி.. எந்த ராசிக்காரர்கள் என்ன செய்ய வேண்டும்?
நாக பஞ்சமி அன்று நாக தேவதைகளை வழிபட்டால், பாம்பு வயதில் இருந்து விடுதலை கிடைக்கும். அதுமட்டுமின்றி, வாழ்க்கையில் அனைத்து துன்பங்களும் நீங்கும், தோஷங்கள் நீங்கி மங்களம் உண்டாகும். வீட்டில் இருக்கும் உறுப்பினர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.
இதையும் படிங்க: நாக பஞ்சமி அன்று பாம்பு கனவில் வருவது சுபமா அல்லது அசுபமா ??
நாகபஞ்சமி நாளில் அதிகாலையில் இருந்து நீராடி, சுத்தமான ஆடை அணிந்து, சிவலிங்கத்திற்கு நீர் படைத்து வழிபடுங்கள். பிறகு நாக கடவுளின் சின்னத்தில் பூஜை செய்து, பழங்கள், பூக்கள்ழ் ஊதுபத்தி, பச்சைப்பால் நெய்வேத்தியம் படைத்து, நாகதேவிக்கு ஆர்த்தி செய்து வழிபடுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D