ஆசைப்பட்டது நிறைவேற.. மார்கழி மாதம் பிரம்ம முகூர்த்த விளக்கு இப்படி ஏற்றி பாருங்களே..!
மார்கழி மாதம் பிரம்ம முகூர்த்தம் விளக்கு ஏற்றும் முறை குறித்து இங்கு பார்க்கலாம்.
உங்களுக்கு தெரியுமா, மார்கழி மாதத்தில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றினால் நினைத்த காரியம் உடனே நடக்கும்..மார்கழி மாதம் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த மாதம் ஆகும். பொதுவாகவே, பன்னிரண்டு மாதங்களில் ஆறு மாத காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாகவும், மற்றோரு ஆறு மாத காலம் அவர்களுக்கு இரவு பொழுதாகவும் இருக்கும் என்று கூறுகின்றனர்.
பொதுவாகவே, மார்கழி மாதம் முன் வரை தேவர்கள் உறங்குவார்கள். பின் மார்கழி மாதம் முழுவதும் அவர்களுக்கு பிரம்ம முகூர்த்த காலம் ஆகும். இன்னும் சொல்லப் போனால், இது கடவுள்கள் எழும் நேரமாகும்.. அதனால்தான் மார்கழி மாதத்தில், தெய்வங்களை வழிபட வேண்டும் என்று சொல்வார்கள். இவ்வளவு சிறப்பு மிக்க மார்கழி மாதத்தில் காலை எழுந்ததும், நம்முடைய குரலை கடவுள் கேட்கவும், மற்றும் நம்முடைய வழிபாட்டை அவர் காண வேண்டும். இவ்வாறு செய்தால், அவர் மனமகிழ்ந்து உடனே நமது வேண்டுதல்களை நிறைவேற்றுவார்.
இதையும் படிங்க: Margazhi Pavai Nonbu : மார்கழி துவக்கம்! இறையருள் தரும் பாவை நோன்பு!
பிரம்ம முகூர்த்த விளக்கு எப்போது ஏற்ற வேண்டும்?
மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்து, தலைக்கு குளித்த பிறகுதான் இந்த பிரம்ம முகூர்த்த விளக்கை ஏற்ற வேண்டும். இந்நாளில், மொத்தம் 5 விளக்குகள் ஏற்ற வேண்டும். குறிப்பாக இந்நாளில்,
நெய் விளக்கு ஏற்றினால் மிகவும் நல்லது. ஒருவேளை உங்களால் நெய் விளக்கு ஏற்ற முடியவில்லை என்றால், நல்லெண்ணெய்யில் ஒரு சொட்டு நெய் சேர்த்து விளக்கு ஏற்ற வேண்டும். அதுமட்டுமின்றி, பஞ்ச முகூர்த்த எண்ணெய் என்று சொல்லப்படும் ஐந்து விதமான எண்ணெய் கொண்டும் இந்நாளில் விளக்கு ஏற்றலாம்.
இதையும் படிங்க: Margali Pournami : மார்கழிப் பௌர்ணமி! - அம்மன் வழிபாட்டால் சுபகாரியங்கள் கைகூடும் நாள்!
பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றினால் கிடைக்கும் பலன்கள்:
நீங்கள் விளக்கு ஏற்றும் போது, கடவுள் உங்கள் வேண்டுதலை கேட்கும் படி உருக வேண்டும். அதுபோல் இந்த விளக்கு ஏற்றினால் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை, திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைக்கூடும், புத்திர பாக்கியம் உண்டாகும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஏன் 5 விளக்குகள் ஏற்ற வேண்டும்?
நமக்குள் பஞ்ச பூதங்கள் இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், இயற்கையில் தான் இறைவன் கலந்திருப்பதால், அதை உணர்த்தும் விதமாகவே 5 விளக்கு ஏற்றப்படுகிறது. அதுமட்டுமின்றி, மார்கழி மாதம் பூஜையறையில் பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றுவது மிகவும் நல்லது. இந்த விளக்கை ஆண்கள், பெண்கள் என இருவருமே ஏற்றலாம். அதுபோல், பெண்களுக்கு மாதவிடாய் இருந்தால், வீட்டில் கணவர், குழந்தைகள் அல்லது யாரிடமாவது சொல்லி விளக்கு ஏற்ற வேண்டும்.. ஒருவேளை உங்களால் அப்படி முடியவில்லை என்றால், பூஜையறையில் நீங்கள் ஏற்றும் விளக்கை வெளியே எடுத்து வைத்து கிழக்கு முகம் நோக்கி ஏற்ற வேண்டும்.
பிரம்ம முகூர்த்த நேரம் எப்போது?
அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை பிரம்ம முகூர்த்த நேரம் ஆகும். ஒருவேளை உங்களால், 3 மணிக்கு எழ முடியவில்லை என்றால், அதிகாலை 4 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு 4 முதல் 6 மணிக்குள் விளக்கு ஏற்ற வேண்டும்.