Margali Pournami : மார்கழிப் பௌர்ணமி! - அம்மன் வழிபாட்டால் சுபகாரியங்கள் கைகூடும் நாள்!
மார்கழிப் பௌர்ணமி நாளில் சக்தி சொரூபினியாக விளங்கும் துர்கை அம்மனை வழிபட்டால் திருமண்த்தடைகள் நீங்கி விரைவில் திருமண வைபோகம் கைகூடும். கருத்துவேறுபாடுகளால் பிரிந்து தம்பதியர் மீண்டும் இனைந்து வாழும் சூழல் அமையும்.
பௌர்ணமி நன்நாளில் விரதமிருந்து வழிபாடு செய்து ஏராளமான பலன்களை தரும். பௌர்ணமி நாளன்று சத்தி சொரூபினி அன்னை துர்கையை வழிபடுவதும், பூஜை செய்வது மிகவும் சிறப்பான பலன்களை அளிக்கும். மேலும் சதுரகிரி மலை வழிபாடு, திருவண்ணாமலை கிரிவலம் போன்றவையும் சிறப்பானதாகும்.
மார்கழிப் பௌர்ணமி
மாதந்தோறும் பௌர்ணமியான முழுநிலவு வரும். ஆனால், சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பௌர்ணமி மற்றும் மார்கழி மாதத்தில் வரும் மார்கழிப் பௌர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அனைத்து கிழமைகளிலும் பௌர்ணமி நாள் வரும். வெள்ளிக்கிழமையில் வரும் பொள்ணமி அம்மனுக்கு உகந்தநாளக கருதப்படுகிறது.
வெள்ளிக்கிழமை வரும் பௌர்ணமி நாளில் சுக்ரன் உச்சத்தில் வீற்றிருப்பதால், களத்திர தோஷம் உள்ளவர்கள், திருமணத்தடை இருப்பவர்கள், சுக்கிர தசை நிகழும் ராசிக்காரர்களான ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள், மற்றும் பரணி, பூரம் மற்றும் பூராடம் நட்சத்திரக்காரர்களும் சக்தி சொரூபினாயன துர்கை அம்மனுக்கு விரதமிருந்து வழிபடுவது நல்லது.
விரதமுறை
பௌர்ணமி விரதமிருக்கும் முன் துர்கை அம்மனுக்கு உகந்த வெள்ளை நிறத்தில் வஸ்திரங்களை சாற்றி, அனைத்து பூக்களையும் கொண்ட கதம்ப மாலையை அணிவித்து மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்தும், தேங்காய், பூ பழங்களை வைத்து வழிபட வேண்டும். இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலம் திருமணத்தடைகள் உள்ளவர்களுக்கு தோஷம் நீங்கி திருமண வைபோகம் கைகூடும். பிரிந்து வாழும் கணவன் மனைவி ஒன்று சேர்வர். தடைபட்ட பணிகள் எதுவாயினும் வெற்றியடையும் என்பது ஐதீகம்.
கிரிவலம் செல்ல உகந்த நேரம்
மார்கழிப் பௌர்ணமி நாள் (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.26 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் ஜன7-ம் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 4.20 மணிக்கு நிறைவு பெறுகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆருத்ரா தரிசனம்
இன்று, ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜர் சிவகாமியுடன் ஆயிரம் கால் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
கார்த்திகை தீபத் திருநாளில் திருவண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீப நெய்யில் பல்வேறு மூலிகை பொருட்கள் சேர்த்து "மை" யாக தயாரிக்கப்பட்டு ஆருத்ரா தரிசனத்தின் போது நடராஜர் பெருமானுக்கு தீப மை சாற்றப்படுவது வழக்கம்.