Asianet News TamilAsianet News Tamil

200-க்கும் அதிகமான மகான்கள் ஒரே இடத்தில் ஜீவசமாதியான கோயில்.. எங்குள்ளது தெரியுமா?

திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் உள்ள சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர் கோவில் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

Interesting facts about thirunelvei sundareswarapuram sudareshwarar temple Rya
Author
First Published Oct 2, 2023, 1:11 PM IST

இந்துக் கடவுள்களில் முதன்மையானவராக கருதப்படுபவர் சிவபெருமான். சிவபெருமானுக்கு எண்ணற்ற புராதான கோயில்கள் நாடு முழுவதும் உள்ளன. கோடிக்கணக்கான பக்தர்கள் இந்த சிவாலயங்களுக்கு சென்று சிவபெருமானை தரிசித்து வருகின்றனர். இந்த நிலையில் சுமார் 4000 ஆண்டுகளுக்குமுன் ஒரே இடத்தில் மன்னனால் 200க்கும் மேற்பட்ட மகான்களை சமாதி செய்துவைக்கப்பட்ட பிரசித்தமான சிவாலயம்,இன்று பராமரிப்பின்றி தனிநபர் ஒருவரின் அர்ப்பணிப்பால் புதுப்பிக்கபட்டு இருக்கிறது. ஆம். உண்மை தான்.. ஒரு சாதாரண சிவபக்தன் தான் குடியிருந்தவீட்டை விற்று கிடைத்த பணத்தில் ஆலய புணரமைப்பு பணிகளை செய்து வருகிறார். 

திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் உள்ள சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர் கோவில் பற்றி தான் பார்க்க போகிறோம். தென்காசியில் இருந்து மதுரை செல்லும் மார்க்கத்தில் கடையநல்லூருக்கு அடுத்த 4 கி.மீ தூரத்தில் சுந்தரேஸ்வரபுரம் என்ற ஊரில் ஊருக்கு வெளியே அமைதியான தோப்புகளின் நடுவே இந்த சிவாலயம் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல கடையநல்லூரிலிருந்து ஆட்டோ வசதியும் உள்ளது. சிவனருள் கிடைத்தவர்கள் பாக்கியவான்கள் தரிசிக்கலாம். இந்த கோவிலில் சூரியன் மறைந்துவிட்ட போதும் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.

திங்கட்கிழமை 'இந்த' பரிகாரங்களை செய்தால் சிவன் அருள் கிடைக்கும்... வறுமை நீங்கும்..செழிப்பும் கிடைக்கும்!

இந்த சிவாலலயத்தில் எங்கு நின்றாலும் காஸ்மிக் அதிர்வுகளை உணர முடியும் என்று கூறப்படுகிறது. நமது வாழ்வியல் முறைகளை அங்குள்ள சிற்பங்கள் பறைசாற்றுகின்றன. குறிப்பாக ஒரு சிற்பம்:தாயின் வயிற்றிலிருந்து குழந்தைபிறப்பை காட்டுகிறது, அதுமட்டுமின்றி, குழந்தை நிலைதடுமாறியிருக்கும் போது (இன்று Breach என்று சிசேரியன் செய்வார்கள்) மருத்துவம் பார்க்கும்  டெக்னிக்கூட தத்ரூபமாக தூணில் சிற்பமாக காட்டபட்டுள்ளது.

இதே போல் ஒரு தூணில் பிராணயாம பயிற்சியை  விளக்கும் அரிய சிற்பம் உள்ளது. இதே போல் ஆச்சர்யமளிக்கும் எண்ணற்ற சிற்பங்கள் உள்ளன. ஒரு சிறப்பு என்னவென்றால் அந்த சிற்பத்தின்மீது கை வைத்தாலே நமக்கு மூச்சு மேலும் கீழும் இயங்கத்தொடங்கி பிராணயாமம் இயல்பாகவே நடக்கும் என்று கூறப்படுகிறது. இந்த கோயிலுக்கு சென்றவர்கள் இந்த உண்மையை அனுபவித்ததாக கூறுகின்றனர். 

இந்த கோயிலில் பௌர்ணமி யாகபூஜை சிறப்பாக செய்யபடுகிறது.யாக ஜோதியில் பல்வேறு இறை ரூபங்கள் காட்சிகளாக கிடைத்துள்ளது. ஆலயபராமரிப்புசெய்யும் சிவனடியாரிடம் தொகுப்பாக இருக்கு.பாக்கியமுள்ளவர்கள் பௌர்ணமி ஹோமத்தில் பங்கெடுக்கலாம். முடிந்தால் காணிக்கை செலுத்தலாம்.கட்டாயமில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios