Hosur Alagan Malai Murugan Temple history and Specialities in Tamil : ஒசூரில் அமைந்துள்ள அழகன் மலை முருகன் கோயிலின் தல வரலாறு, சிறப்புகள் மற்றும் அங்கு செல்லும் வழிமுறை குறித்து முழுமையாக பார்க்கலாம்.

ஓசூர் பாகலூர் சாலையில், மாநகராட்சி அலுவலகம் எதிரே 100 அடி உயர மலைக்குன்றின் மீது புதிதாக கட்டப்பட்டுள்ள அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத அழகன் முருகன் கோவில் சிறப்பு வாய்ந்தது.இது ஓசூரின் முக்கிய சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது. அமைதியான ஆன்மிக ஸ்தலமாக இக்கோயில் விளங்குகிறது.

கோயில் உருவாக இருந்த காரணம்: 

ஓசூரில் பல முருகன் கோவில்கள் இருந்தாலும், மலைமீது ஒரு முருகன் கோவில் இல்லை என்ற பக்தர்களின் நீண்ட நாள் ஏக்கத்தைப் போக்க இந்த அழகன் முருகன் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. மக்களுக்காக உருவாக்கப்பட்டது தான் இக்கோயில் என்று கூறப்படுகிறது.

கோவில் அமைப்பு: 

ஸ்ரீ வள்ளி மற்றும் தெய்வானை சமேதராக அழகன் முருகன் பிரமாண்டமான சிலையுடன் எழுந்தருளியுள்ளார்.மலையின் உச்சியில் இருந்து ஓசூர் நகரின் அழகிய காட்சியை ரசிக்க முடியும்.நவீன கட்டிடக்கலை சார்ந்த கோயில்.

விழாக்கள்:

கந்த சஷ்டி விழா, திருக்கல்யாண உற்சவம் மற்றும் மாத கிருத்திகை நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

View post on Instagram

View post on Instagram