Asianet News TamilAsianet News Tamil

"இந்த" மீன்களை வீட்டில் வளர்த்தால் பணப்பிரச்சனை வரவே வராது...அது என்ன மீன்கள் தெரியுமா?

பலர் தங்களது வீட்டில் செல்வம் செழிக்க, பணம் புழங்க மீன்களை வீட்டில் வளர்ப்பார்கள். அதிலும் குறிப்பிட்ட சில வகை மீன்களை வளர்த்தால் மட்டுமே வீட்டில் செல்வம் பெருகும் எனக் கூறப்படுகிறது.

here lucky vastu fish to bring prosperity happiness and good luck at home in tamil mks
Author
First Published Nov 11, 2023, 11:33 AM IST | Last Updated Nov 11, 2023, 11:38 AM IST

நம்மில் பலருக்கு வீட்டில் மீன்களை வளர்ப்பார்கள். ஆனால் உளவியல் ஆய்வுபடி, வீட்டில் மீன் வளர்ப்பதால், அவற்றை பார்க்கும் போது மனம் லேசாகி மன அழுத்தம் குறைவடையுமாம். மேலும் சிலர், வீட்டில் மீன்களை வளர்த்தால் நன்மைகள் கிடைக்கும் என்பதற்காகவும், செல்வம் கொழிக்க வேண்டும் என்பதற்காகவும் மீன்களை வளர்ப்பார்கள். அந்தவகையில், இப்பதிவில் வீட்டில் வளர்க்கக் கூடிய வாஸ்து மீன்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

செல்வத்தை தரும் வாஸ்து மீன்கள்: பலரது வீடுகளில் மீன் வளர்ப்பு என்பது வாஸ்து முறையாக பார்க்கப்படுகிறது. இது சீன மொழியில் பெங்சூய் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் வாஸ்து மீன்களாக பார்க்கப்படுபவை, அரோனா, பிளவர் ஹார்ன், கோல்டன் ஃபிஷ் மற்றும் கோய் என்பவை ஆகும். ஆனால் இவை எல்லாவற்றையும் விட அரோனா வகை மீன்களை வீட்டில் வளர்த்தால் வீட்டில் பண மழை கொட்டும் என்று நம்பப்படுகிறது. அதுபோல், வங்கியில் வேலை செய்பவர்கள், வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள், சுய தொழில் செய்பவர்கள் என இது போன்ற வாஸ்து மீன்களை நீங்கள் வீட்டில் வளர்த்தால் உங்களுக்கு பணம் புழங்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க:  தவறுதலாக கூட 'இந்த' பொருட்களை உங்கள் பர்ஸில் வைக்காதீங்க..நிதி நெருக்கடியால் சிரமப்படுவீங்க..!!

கண் திருஷ்டி நீங்கும்: அதுபோல், இந்த வாஸ்து மீன்களை நீங்கள் உங்கள் வீட்டில் வளர்த்தால் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மீது இருக்கும் கண் திரிஷ் நீங்கும் என்று கூறப்படுகிறது. இந்துமதம் தவிர பிற மதத்திலும், கண் திரிஷ்டி என்பது மிகவும் சக்தி வாய்ந்த விடயமாகப் பார்க்கப்படுகிறது. எனவே, இவற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த வாஸ்து மீன்களால் மட்டுமே 
முடியும் என்று பலரால்  நம்பப்படுகிறது. 

இதையும் படிங்க:  Vastu For Money : உங்கள் வீட்டில் வருமானம் குறையாமல் இருக்க பணத்தை வீட்டில் இப்படி வையுங்க..!!

அதுமட்டுமின்றி, இந்த வாஸ்து மீன்கள் யாவும்  வீட்டிற்கு நேர்மறை ஆற்றல்களை கொண்டுவருவதோடு மட்டுமில்லாமல், அவை மனதிற்கு நல்ல எண்ணங்கள் உருவாக வழிச் செய்கிறது. ஆதலால் இந்த வாஸ்து மீன்களை உங்கள் வீட்டில் உடனே வளருங்கள் இதனால் உங்கள் வீட்டில் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios