வீட்டில் ஓயாமல் பிரச்சனையா? ஒரே ஒரு தீபம் போதும்... தீய சக்திகள் விலகிவிடும்..

நம் வீட்டில் ஒரே ஒரு தீபம் ஏற்றுவதன் மூலம் எப்படி இந்த கெட்ட சக்தியை விரட்டலாம் என்று உங்களுக்கு தெரியுமா?

Having a problem with not resting at home? Just one lamp is enough... evil forces will go away.. Rya

நம் எல்லோருக்குமே எப்போதுமே நல்லது மட்டும் நடக்காது. அல்லது கெட்டது மட்டுமே நடக்காது. நல்லது கெட்டது இரண்டுமே கலந்ததுதான் வாழ்க்கை. நம் வீட்டில் நல்ல சக்திகள் இருக்கும் போது எந்த பிரச்சனையும் இருக்காது. நல்ல காரியங்கள் நடக்கும். ஆனால் கெட்ட சக்தி அதிகமாக இருந்தால் வீட்டில் சண்டை சச்சரவு அதிகமாக இருக்கும். ஓயாமல் பிரச்சனை வந்து கொண்டே இருக்கும். நம் வீட்டில் இதுபோன்ற எதிர்மறை ஆற்றல் இருந்தால் நம் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாது. ஆனால் நம் வீட்டில் ஒரே ஒரு தீபம் ஏற்றுவதன் மூலம் எப்படி இந்த கெட்ட சக்தியை விரட்டலாம் என்று உங்களுக்கு தெரியுமா?

வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருந்தால், வீட்டில் இருப்பவர்களுக்கு மாறி மாறி உடல்நிலை சரியில்லாமல் போகும். எல்லா முயற்சிகளும் தோல்வியடையும். வியாபாரத்தில் தொடர் நஷ்டம் ஏற்படும்.. வீட்டில் எப்போதும் சண்டை. ஒரு போதும்  இருக்காது. சுப காரியங்களில் நடைபெறுவதில் தடை ஏற்படும். வீட்டில் அமைதியே இருக்காது. ஆனால். இதை சரி செய்ய ஒரே ஒரு தீபம் போதும். ஞாயிற்றுக்கிழமை இந்த தீபத்தை ஏற்றுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். இந்த விளக்கை ஏற்றுவதற்கு இரும்பு அகல் விளக்கு வேண்டும். வேப்ப எண்ணெய் மற்றும் வேப்ப எண்ணெய் சம அளவு கலந்தது, திரவிய பட்டை பொடி, ஆகியவை தேவை. இவை அனைத்தும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

வராகி அம்மனுக்கு இவர்களை தான் மிகவும் பிடிக்குமாம்.. பிடிக்காதவர்கள் யார் தெரியுமா?

அதில் போடக்கூடிய திரிக்காக சிவப்பு நிற துணியை தேர்ந்தெடுக்க வேண்டும். சிவப்பு கலர் துணியை தேர்வு செய்ய வேண்டும். அந்த துணியை நன்றாக அலசிவிட்டு, எருக்கஞ்செடி பாலில் நினைத்து நிழலில் உலர்த்த வேண்டும். அதன்பின்னரே இதை திரியாக பயன்படுத்த வேண்டும். இந்த விளக்கை நம் வீட்டின் ஹாலில் ஏற்ற வேண்டும்.

தீபம் ஏற்றுவதற்கு முன், இந்த விளக்கில் சிறிது வெண்கடுகு மற்றும் வால் மிளகு ஆகியவற்றைப் போட்டு விளக்கேற்றவும். இதை தொடர்ந்து மூன்று நாட்கள் செய்ய வேண்டும். முதல் நாள் பயன்படுத்திய திரி மற்றும் எண்ணெயை மறுநாள் பயன்படுத்தக் கூடாது. விளக்கை சுத்தம் செய்து, புதிய திரி மற்றும் எண்ணெய் வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.இதை நம் வீட்டில் செய்வதால், நம் வீட்டில் இருக்கக்கூடிய கெட்ட சக்திகளின் தன்மை படிப்படியாக குறைந்து வீட்டில் நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios