திருச்செந்தூரில் மாசி திருவிழா கொடி ஏற்றத்துடன் கோலாகலமாக இன்று தொடங்கியது
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
உலகப்புகழ் பெற்ற முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மாசித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை ஒரு மணிக்கு திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கோவில் உள் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடி மரத்தில் அதிகாலை 5.20 மணிக்கு கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல வகையான அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தீபாராதனை நடந்தது. 12 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும் இந்த திருவிழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் காலை மற்றும் மாலையில் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் கொயேற்றத்துடன் தொடங்கிய பிரமோற்சவம்
விழாவின் முக்கிய நிகழ்வுகளான 7-ம் திருநாள் சிவப்புச் சாத்தியும், 8-ம் திருநாள் பச்சை சாத்தி சப்பரத்திலும் சுவாமி சண்முகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் மார்ச் 6ம் தேதி தேரோட்டம் நடைபெறும். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.
சென்னை -மதுரை தேஜஸ் விரைவு ரயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும் - தென்னக ரயில்வே