செவ்வாய்க் கிழமை தவறுதலாக கூட இதை எல்லாம் செய்யாதீங்க.. பல பிரச்சனைகள் ஏற்படலாம்..

செவ்வாய் கிழமை செய்வதைத் தவிர்க்க வேண்டிய செயல்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Dont do all this even by mistake on Tuesday.. many problems may arise Rya

ஜோதிடத்தின் படி வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்திற்கும், ஒவ்வொரு கடவுளுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் செவ்வாய்க்கிழமை கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாகும். மேலும் செவ்வாய்க்கிழமைஅனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, ஒருவரது ஜாதகத்தில் பலம், தைரியம், சகோதரத்துவம், சொத்து போன்றவற்றுக்கு செவ்வாய் நன்மை செய்பவர். ஜாதகத்தில் செவ்வாய் வலுவிழந்த நிலையில் இருப்பவர் எதிரிகளால் சூழப்பட்டு, சகோதரர்களுடன் உறவில் விரிசலைக் கொண்டிருக்கலாம். ஜாதகத்தில் பலவீனமான செவ்வாய் கிரகம் இரத்த சம்பந்தமான பிரச்சனைகள், தொழுநோய், புற்று நோய் போன்ற பல நோய்களையும் உண்டாக்குகிறார். 

இதனால் தான் செவ்வாய் கிழமை செய்யும் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் அது செவ்வாய் பகவானை கோபப்படுத்தும் என்று கூறப்படுகிறது, மேலும் அவர் சாதகமற்ற பலனை தரக்கூடும். எனவே செவ்வாய் கிழமை செய்வதைத் தவிர்க்க வேண்டிய செயல்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

கிருஷ்ணர் ஏன் 16,100 பெண்களை ஒரே நாளில் திருமணம் செய்தார்? பல சுவாரஸ்ய தகவல்கள்

செவ்வாய்கிழமை தவிர்க்க வேண்டியவை

  • செவ்வாய்கிழமை யாரிடமும் கடன் கொடுக்கவோ, கடன் வாங்கவோ வேண்டாம். இது செவ்வாய் பகவானை கோபப்படுத்துகிறது, இதனால் நிதி நிலைமை மோசமடையலாம்
  • செவ்வாய் கிழமை கருப்பு ஆடைகளை அணிவதை தவிர்க்கவும், ஏனெனில் இது சாதகமற்ற தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த நாளில் சிவப்பு அல்லது செம்பு நிற ஆடைகளை அணிய முயற்சி செய்யுங்கள்.
  • செவ்வாய் அன்று நிலம் தொடர்பான செயல்களைச் செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் கோபத்தை ஏற்படுத்தும் இந்த நாளில் ஒருவர் ஒருபோதும் நிலம் வாங்கவோ அல்லது பூமி பூஜை செய்யவோ கூடாது.
  • செவ்வாய் கிழமையில் முடி அல்லது தாடியை வெட்டாதீர்கள், அது உங்கள் ஆயுளைக் குறைக்கும்.
  • ஜாதகத்தில் செவ்வாயின் ஸ்தானம் பலவீனமடைவதால் கண்ணாடிப் பாத்திரங்களையோ அல்லது கண்ணாடிப் பொருட்களையோ யாருக்கும் பரிசளிக்க வேண்டாம்.
  • செவ்வாய்க் கிழமை மேக்கப் பொருட்களை வாங்க வேண்டாம். தம்பதிகளின் திருமண வாழ்க்கையில் குழப்பம் மற்றும் இடையூறுகள் ஏற்படுத்தலாம்,
  • செவ்வாய் கிழமையில் உளுத்தம் பருப்பை சமைக்கக்கூடாது. உளுந்து சனி கிரகத்துடன் தொடர்புடையது என்பதால் சனி செவ்வாய் கலவை குடும்பத்திற்கு தீங்கு விளைவிக்கும்
  • செவ்வாய் கிழமையில் நகங்களை வெட்டக்கூடாது. 
  • செவ்வாய் கிழமையில் மூத்த உறவினருடன் சண்டையிடக்கூடாது. இதனால் இருவருக்கும் தீங்கு ஏற்படலாம்
  • செவ்வாய் கிழமையில் இரும்பு சம்மந்தப்பட்ட பொருட்களை வாங்கக்கூடாது. இதனால் உடல் உபாதைகள் ஏற்படலாம்.
  • நகவெட்டி கத்தி, கத்தரிக்கோல் மற்றும் கூரிய பொருள்களை செவ்வாய்க்கிழமை வாங்கக்கூடாது.
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios