Asianet News TamilAsianet News Tamil

திருப்பதியில் பக்தர்களுக்கு அன்லிமிடட் லட்டு - தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு அன்லிமிடட் லட்டு வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Devasathanam announcement that devotees who come with darshan ticket in ttd will be given unlimited lattu vel
Author
First Published Sep 1, 2024, 11:16 PM IST | Last Updated Sep 1, 2024, 11:18 PM IST

திருமலை திருப்பதி கோவிலில் தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ற எண்ணிக்கையில் லட்டு பிரசாதம் வழங்கப்படும் என தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “சாமி தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு அவர்கள் கேட்டும் எண்ணிக்கையில் லட்டு வழங்கப்படும். அதன்படி நாளை முதல் ஒரு லட்டு ரூ.50 என்ற விலையில் பக்தர்கள் தேவையான லட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

பக்தர்களுக்கு ஜாக்பாட்; திருப்பதியில் லட்டு மட்டும் இல்ல, இனி இதுவும் ப்ரீ தானாம்

தரிசனம் செய்யாதவர்களுக்கு ஆதார் அடிப்படையில் தலா 2 லட்டுகள் மட்டும் வழங்கப்படும். பக்தர்களுக்கு அன்லிமிடட்டாக லட்டு வழங்க வேண்டும் என்ற கொள்கையை தேவஸ்தானம் இதுவரை கவனத்தில் கொள்ளாமல் இருந்துவிட்டது” என்று தெரிவித்தார்.

முன்னதாக தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்கள் லட்டு கவுண்டர்களில் ஆதார் அட்டையை பயன்படுத்தி 2 லட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்து இருந்தது.

திருமலை திருப்பதியில் தண்ணீர் பஞ்சம்! இன்னும் 120 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் உண்டு!

திருப்பதி கோவிலில் தற்போது நாள் ஒன்றுக்கு 3.5 லட்சம் அளவில் லட்டுகள் விற்கப்படும் நிலையில், இதில் சுமார் 1 லட்சம் லட்டுகள் இடைத்தரகர்கள் மூலமாக வாங்கப்பட்டு வெளியிடங்களில் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், இதனை தடுக்கும் வகையில் ஆதார் முறையை அறிமுகப்படுத்தி உள்ளதாக தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios