Asianet News TamilAsianet News Tamil

கருப்பு கயிறு அணிபவர்கள் செய்யக்கூடாத தவறு என்ன? அதுவும் இந்த ராசியினருக்கு ரொம்ப டேஞ்சர்!!

கண் திருஷ்டியை நீக்க சிலர் கருப்பு கயிறை அணிந்து கொள்கிறார்கள். ஆனால் சில ராசிக்காரர்கள் கருப்பு கயிறை அணிவதால் மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. எந்தெந்த ராசிகளுக்கு கருப்பு கயிறு உகந்தது அல்ல... வாங்க பார்க்கலாம். 

Curry Leaves benefits in tamil
Author
First Published Apr 29, 2023, 10:47 AM IST | Last Updated Apr 29, 2023, 10:47 AM IST

பொதுவாகவே கைகளில், கழுத்தில், கால்களில் கயிறு அணிந்து கொள்ளும் பழக்கம் மக்களிடையே காணப்படுகிறது. தங்கள் மேல் விழும் கெட்ட கண் திருஷ்டியை தவிர்க்க இப்படி கருப்பு கயிறு கட்டி கொள்கிறார்கள். இது பல எதிர்மறை சக்திகளிலிருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது என்பது ஐதீகம். உடலின் வெவ்வேறு பகுதிகளிலும் கருப்பு கயிறு கட்டும் பாரம்பரியம் நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது.  

கருப்பு கயிறு பொதுவாக பெண்கள் கால்களில் தான் கட்டப்படுகிறது. குழந்தைகளுக்கு இடுப்பில் கட்டப்படும். அதனால் அவர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்பது ஐதீகம். சில பெண்கள் அதை மணிக்கட்டில் அல்லது கழுத்தில் கட்டி கொள்வார்கள். இதில் நன்மைகள் இருந்தாலும், சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, சில ராசிக்காரர்கள் கருப்பு கயிறை அணியக் கூடாது. இந்த 4 ராசிக்காரர்கள் கருப்பு கயிற்றைக் கட்டினால் லாபத்திற்கு பதிலாக அவர்களுக்கு நஷ்டம் தான் ஏற்படும். ஜோதிடத்தின்படி, சில ராசிக்காரர்கள் கருப்பு கயிற்றை கட்டுவதாலும், கருப்பு ஆடைகளை அணிவதாலும் வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுகின்றன. 

மேஷம்

மேஷத்தின் அதிபதியாக செவ்வாய் உள்ளது. செவ்வாயின் நிறம் சிவப்பு ஆகும். செவ்வாய் கிரகத்திற்கு கருப்பு நிறம் பிடிக்காது. மேஷ ராசிக்காரர்கள் அவர்களின் கை, கால் அல்லது கழுத்தில் கருப்பு கயிறு கட்டினால், அவர்களது வாழ்க்கையில் வீண் பிரச்சினைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. வாழ்க்கையில் தோல்விக்கு காரணமாகிவிடும். மேஷ ராசிக்காரர்கள் கருப்பு கயிறு கட்டும் முன்பு ஜோதிடரின் ஆலோசனையை நிச்சயம் பெற வேண்டும். ஏனென்றால் கருப்பு கயிறால் அவர்களது உடலில் எதிர்மறை ஆற்றல் உண்டாகும் என்பது நம்பிக்கை. மேஷ ராசிக்காரர்கள் கருப்பு நிறத்திற்கு பதிலாக சிவப்பு நிற கயிறை அணிவது நல்லது. 

விருச்சிகம் 

ஜோதிட சாஸ்திரப்படி விருச்சிக ராசிக்காரர்களின் அதிபதியும் செவ்வாய் கிரகம் என்பதால், இவர்களும் கருப்பு கயிறு அணியக் கூடாது. இதனால் வாழ்க்கையில் பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும். செவ்வாய் கிரகத்திற்கு கருப்பு நிறம் ஏற்றதல்ல. இதனால் விருச்சிக ராசியினர் வாழ்க்கையில் எதிர்மறையான பலன்கள் வரும். அவர்கள் செய்யும் காரியம் கெட்டுவிடும் எனவும் நம்பப்படுகிறது. கருப்பு கயிறை இந்த ராசியினர் அணிந்தால் துரதிர்ஷ்டம், எதிர்மறை ஆற்றல், நோய், குழப்பம், நிதி நெருக்கடி, வீழ்ச்சி போன்றவை ஏற்படும். 

black thread benefits

இதையும் படிங்க: மறந்தும் பர்ஸில் இந்த பொருளை வைக்காதீங்க! காசு கையில் நிற்காமல், தரித்திரம் பிடிக்கும்!!

ரிஷபம் 

ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இவருக்கு வெள்ளை நிறம் ஏற்றது. இந்த ராசிக்காரர்கள் தங்கள் உடலில் கருப்பு கயிறை அணிந்தால், அது நேர்மறை ஆற்றலுக்கு பதிலாக வாழ்க்கையில் சிக்கல்களை ஏற்படுத்தும். ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாக இருந்தால் கருப்பு கயிறு அணியும் போது இன்னும் மோசமான விளைவுகள் ஏற்படும். ரிஷப ராசிக்காரர்களின் வேலைகளில் தடைகள் ஏற்பட கருப்பு கயிறு காரணமாக இருப்பதாக நம்பப்படுகிறது. சுக்கிரன் அதிருப்தி அடைந்தால் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும். திருமணத்தில் தடை ஏற்படலாம் அதனால் விருச்சிக ராசியினர் கருப்பு கயிறு அணிவதை தவிர்க்க வேண்டும். 

தனுசு 

தனுசு ராசியின் அதிபதி வியாழன். இந்த ராசிக்காரர்கள் கரும்பு கயிறு அணியும்போது வியாழன் கோபம் கொள்கிறார். இதனால் வேலையில் சிக்கல்கள் உண்டாகும். தனுசு ராசிக்காரர்கள் கருப்பு நிறத்திற்கு பதிலாக மஞ்சள் கயிறு மற்றும் அதே நிறத்தில் உள்ள ஆடைகளை அணிவது நல்லது. அதே நேரத்தில் கருப்பு நிற ஆடைகளையும், கருப்பு நிற கயிறையும் தவிர்க்க வேண்டும். 

இதையும் படிங்க: ஒருபோதும் அன்னதானத்தில் இந்த நபர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது.. ஏன் தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios