Asianet News TamilAsianet News Tamil

ஒருபோதும் அன்னதானத்தில் இந்த நபர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது.. ஏன் தெரியுமா?

எல்லோரும் வயிறார சாப்பிடத்தான் அன்னதானம் என நினைத்திருப்பீர்கள். ஆனால் அன்னதானத்தில் ஒரு சிலர் சாப்பிடக் கூடாது என இந்து சாஸ்திரங்கள் சொல்கின்றன. 

why food should not be eaten in annadanam
Author
First Published Apr 28, 2023, 5:31 PM IST | Last Updated Apr 28, 2023, 5:31 PM IST

நாம் கோவில்களுக்கு வழிபாட்டிற்கு செல்லும்போது அங்கு அன்னதானம் வழங்குவதை பார்த்திருப்போம். நாமும் கூட அங்கு அமர்ந்து சாப்பிட்டுவிட்டு வந்திருப்போம். கோயிலில் உண்பதால் புண்ணியம் கிடைக்கும் என்பார்கள். சிலர் வீட்டில் சுப காரியங்கள் நிகழ்வதற்கு முன்பு அன்னதானம் ஏற்பாடு செய்வார்கள். சிலர் வேண்டுதலுக்காக அன்னதானம் வழங்குவார்கள். ஆனால் இந்து சாஸ்திரம் அன்னதானம் சாப்பிடக்கூடாது என சிலருக்கு அறிவுறுத்துகிறது. அது ஏன் என்பது இந்த பதிவில் காணலாம். 

இந்து மதம் மட்டுமல்ல, சீக்கியம், கத்தோலிக்க கிறிஸ்தவம் உள்ளிட்ட மதங்களில் அன்னதானம் வழங்கும் பழக்கம் இருக்கிறது. அதற்கு பெயர்கள் வேண்டுமானால் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பசியோடிருப்பதை எந்த மதமும் விரும்புவதில்லை. அதைப் போல வீட்டில் எந்த சுப காரியம் நடந்தாலும், அந்த சுப காரியம் நடந்த பின்னர் மக்கள் பெரும்பாலும் அன்னதானம் ஏற்பாடு செய்கிறார்கள். 

இந்து மத நூல்களில், அன்னதானம் செய்வது அவசியமாகக் கருதப்படுகிறது. உணவு கிடைக்காத யாசகர்கள், ஏழைகள், பசியோடு இருக்கும் பலருக்கும் அன்னதானம் பசியாற்றுகிறது. இவர்களுக்கு உணவு வழங்குவது நல்லது. நம் வீட்டிலும் நேர்மறை ஆற்றலை நிலைநிறுத்துகிறது. வீடு முழுக்க மகிழ்ச்சி பெருகும். வீட்டில் செல்வ, செழிப்பு நிலைகொள்ளும். 

ஆனால் உணவுக்கு கஷ்டப்படாத திறமையான நபர் ஒருவர் அன்னதானத்தில் உண்பது நியாயமற்றது என்று கூறப்படுகிறது. ஏனென்றால் அன்னதானத்தின் நோக்கமே ஏழை, உணவு கிடைக்காதவர்களுக்கு பசியாற்றுவது தான். அன்னதானத்தில் ஒரு திறமையான நபர் உணவை உண்பது, தேவையுள்ள ஒருவரின் பங்கை அபகரிப்பது போல் கருதப்படுகிறது. சாஸ்திரங்களின்படி, இப்படி செய்வது அந்த நபருக்கு அசுபமானது. 

இதையும் படிங்க: சித்ரா பெளர்ணமி 2023 எப்போது? பொன்னும் பொருளும் அருளும் சித்ர குப்த வழிபாடு!

Annadhanam benefits tamil

அன்னதானத்தில் வசதி வாய்ப்புள்ளவர் சென்று சாப்பிட்டால் அவருக்கு பாவம் சேரும். அவரது வாழ்க்கையில் தோல்வி வரும். அவருடைய வீட்டில் உணவு, பணத்திற்கு தட்டுப்பாடு ஏற்படும். இதனால் மகாலெட்சுமி கோவம் கொள்வாள் என்பது ஐதீகம். இப்படி அன்னதானத்தில் எல்லா வசதியும் உள்ள ஒருவர் சாப்பிட்டால், அவருடைய பணியிடத்தில், பல பிரச்சனைகளை சந்திக்கத் தொடங்குகிறார். இப்படி அன்னதானத்தில் உண்பவருக்கு விஷ்ணுவின் அருள் கிட்டாது என்றும், ஒருபோதும் விஷ்ணுவின் அனுக்கிரகம் கிடைக்காது என்றும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: மறந்தும் பர்ஸில் இந்த பொருளை வைக்காதீங்க! காசு கையில் நிற்காமல், தரித்திரம் பிடிக்கும்!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios