Asianet News TamilAsianet News Tamil

நகங்களை அடிக்கடி கடிக்கும் பழக்கம் இருக்கா? அதனால் வரும் பாதிப்புகள் இவ்வளவு இருக்கு!

நகம் கடிப்பதால் வீட்டில் வறுமை ஏற்படும் என இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதற்கு என்ன காரணம்ம்? ஏன் அப்படி நடக்கிறது என்பதை இங்கு காணலாம்.  
 

Chewing Nails side effects in tamil
Author
First Published May 10, 2023, 7:25 AM IST

சிலருக்கு நகம் கடிக்கும் பழக்கம் உண்டு. கோவம், டென்ஷன், பதற்றம் போன்ற காரணங்களுக்காக நகம் கடிப்பதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள். இந்தப் பழக்கம் ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இது ஒரு புறமிருக்க ஜோதிடத்தின்படி, இந்த பழக்கம் ஒரு நபருக்கும், அவரது வீட்டிற்கும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.  

நகம் கடிப்பதால்...

நகங்களைக் கடிக்கும் பழக்கம் ஜாதகத்தில் உள்ள கிரகங்களுக்கு மோசமான விளைவை ஏற்படுத்தும் என ஜோதிடம் சொல்கிறது. இதனால் கிரகங்கள் தொந்தரவுக்கு ஆளாகும். உங்கள் ஜாதகத்தின் கிரக அதிபதியின் நிலையும் மொத்தமாக வீழ்ச்சியடையத் தொடங்குகிறது. 

கிரகங்கள் தொந்தரவு செய்யப்பட்டால் எல்லா வேலைகளிலும் தடைகள் உண்டாகும். ஒரு நபர் தன் தொழிலில் நஷ்டமடைவார். 

ஜோதிட பாதிப்புகள் 

  • நகம் கடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் தொழிலில் சரிவு ஏற்படும். குடும்பத்தில் கருத்து, வேறுபாடுகள் ஏற்பட தொடங்கும். எதிர்மறை ஆற்றல் ஆதிக்கம் அதிகமாகும். 
  • நகம் கடிக்கும் பழக்கம் கொண்டவர்களின் மரியாதை பாதிப்புக்குள்ளாகும். அவருடைய ஆளுமை கெட்டுவிடும்.
  • நம் முன்னேற்றத்திற்கு காரணமாக உள்ள சூரிய கிரகம் நகம் கடிப்பதால் தொந்தரவாகும். இதனால் ஆளுமை குறைபாடுகள் உண்டாகும். 

nails astrology

  • நகம் கடிப்பதால் பணப்பற்றாக்குறை, கடன் வாங்குதல், அதிக செலவு செய்தல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். 
  • நகம் கடிக்கும் கெட்டப்பழக்கத்தால் வீட்டில் மகாலட்சுமியின் ஆசி இல்லாமல் போகும் என ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது. 

இதையும் படிங்க: உலகில் விலையுயர்ந்த மாம்பழம் இதுதான்! ஒரு மாம்பழமே ரூ.19 ஆயிரமா? அப்படி என்ன ஸ்பெஷல்!

நகங்களை கடிப்பதால் உடல்நலப் பாதிப்பு 

நகங்களை கடிப்பதால் கைகளில் இருக்கும் அழுக்கு வயிற்றுக்குள் செல்கிறது. இது வயிற்றில் பிரச்சனையை ஏற்படுத்தும்.
நகங்களை அடிக்கடி கடிப்பதால் நகத்தின் அமைப்பு மோசமடைகிறது.
நகம் கடிப்பதால் அதைச் சுற்றியுள்ள தோலில் தொற்று வரும். பற்களையும் சேதப்படுத்தும்.

சாமுத்ரிகா சாஸ்திரம் 

ஒருவரின் ஆளுமையை தெரிந்து கொள்ள நகங்கள் முக்கியமாக கருதப்படுகிறது. பொதுவாகவே, நகங்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், ஆளுமை உறுதியற்றதாக இருக்கும். இவர்களின் மனம் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்ப மிக விரைவாக மாறுகிறது. பயம், பீதி மற்றும் எதிர்மறை சிந்தனை கொண்டிருப்பார்கள். ஏதாவது ஒரு தீர்வு காணும்போது, ​​இவர்கள் நகங்களை கடிக்க ஆரம்பிக்கிறார்கள். 

இதையும் படிங்க: உங்க வீட்டுல பணமழை பொழியணுமா? இந்த ஒரு அதிசய மரத்தை மட்டும் நட்டு வெச்சு பாருங்க!

Follow Us:
Download App:
  • android
  • ios