பலர் தங்களது கையில் கயிறு கட்டி இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். கருப்பு, பச்சை, சிவப்பு போன்ற கலர்களில் கயிறு கட்டி இருப்பார்கள். அந்த வகையில் கடன் பிரச்சனை நீங்க எந்த கயிறு கட்டுவது நல்லது என்பதை குறித்து இப்பதிவில் காணலாம்.

தற்போது உள்ள காலகட்டத்தில் பெரும்பாலானோர் கடன் வாங்கி தங்களது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். இன்றைய காலக்கட்டத்தில் கடன் என்ற வார்த்தை எல்லோரும் பயன்படுத்துகின்றனர். எல்லோருமே ஏதோ ஒரு சூழ்நிலையில் கடன் வாங்கி அவதிப்படுகின்றனர். இந்நிலையில் உங்கள் வாழ்வில் கடன் பிரச்சனை அறவே ஒளிய கருப்பு கயிறு பரிகாரம் செய்யலாம் என்று ஆன்மீகம் கூறுகிறது. எனவே கருப்பு கயிறு பயன்படுத்தி கடன் பிரச்சனையை எவ்வாறு தீர்க்கலாம் என்பதை கூறித்து பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: குலம் காக்கும் குலதெய்வம் யார் என்று தெரியாமல் கவலையா? இந்த 1 காரியம் செய்தால் உங்க குலதெய்வம் மனதில் தோன்றும்

கடன் பிரச்சனையை தீர்க்கும் கருப்பு கயிறு: 

  • உங்களுக்கு கடன் பிரச்சனை முழுவதுமாக நீங்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு முதலில் குரு பகவானின் அனுக்கிரகம் தேவை. எனவே இந்த பரிகாரத்தை வியாழன் அன்று தான் கண்டிப்பாக செய்ய வேண்டும்.
  • இந்த பரிகாரம் செய்வதற்கு முன் யாருடைய பெயரில் கடன் வாங்கப்பட்டதோ அவரது உயரத்தில் கருப்பு கயிறு வாங்கிக் கொள்ளவும் பின் அந்த கருப்பு கயிறில் ஆங்காங்கே சின்ன சின்ன முடிச்சுகளாக போட்டு அதை சின்னதாக கையில் சுருட்டி வைத்துக் கொள்ளவும்.
  • இந்த பரிகாரம் செய்யும் நாளில் காலையிலே எழுந்து குளித்து பூஜை அறையில் செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் முடித்த பிறகு, பூஜை அறையில் கிழக்கு திசையில் அமர்ந்து கையில் கருப்பு கயிற்றை வைத்துக்கொண்டு ஏழு முறை தலையை சுற்றவும். யார் துணை இல்லாமல் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.
  • இவ்வாறு நீங்கள் உங்கள் தலையை சுற்றும் போது என்னுடைய கடன் எல்லாம் நீங்கிவிடும், நான் அடைத்து விடுவேன் என்ற நம்பிக்கையுடன் சுற்ற வேண்டும். சுற்றிய பிறகு அந்த கயிறை ஓடும் நீரில் விட்டு விடவும்.
  • இந்த பரிகாரம் செய்யத் தொடங்கிய கொஞ்ச நாளிலே உங்கள் கடன் அடைவதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மேலும் பண வரவு அதிகரிக்கும்.
  • உங்கள் கடன் தொல்லையை நீங்கும் வரை இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்ய வேண்டும். நீங்கள் நம்பும் பட்சத்தில் தான் இந்த எளிய பரிகாரம் கடன் இல்லாத ஒரு நிலையை உங்களுக்கு கொண்டு வரும்.