Asianet News TamilAsianet News Tamil

வீட்டு பூஜையறையில் ஒரே கடவுளுக்கு நிறைய சிலைகள் வைத்திருப்பது நல்லதா?

உங்களுடைய வீட்டு கோயில்களில் அல்லது பூஜையறையில் ஒரு கடவுளுக்கு நிறைய சிலைகள் வைத்திருப்பது நல்லதா? வாஸ்துபடி அதை என்ன செய்ய வேண்டும் என்ற முழுவிளக்கம்... 

Arrange idols in your home temple
Author
First Published May 19, 2023, 12:25 PM IST

உங்கள் வீட்டின் கோயில் அல்லது பூஜையறையில் ஒரே கடவுளுக்கு சிலைகள் அதிகமாக இருந்தால், வாஸ்து குறிப்புகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இதனால் உங்கள் வீட்டிற்கு எதிர்மறை ஆற்றல் வராமல் இருக்க கவனமாக இருக்க வேண்டும். வீட்டு பூஜையறை புனிதமானது. இங்கு எப்போதும் நேர்மறை ஆற்றல் இருக்கும்.

உங்களுடைய வழிபாட்டு இல்லத்தில் ஒரே கடவுளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சிலைகளை வைத்திருந்தால், அவற்றை நேருக்கு நேர் வைக்கக் கூடாது. இது எதிர்மறை ஆற்றலை உருவாக்கும். அத்தகைய சூழ்நிலையில், அவற்றை அகற்ற அல்லது அவற்றின் திசையை மாற்ற வேண்டும். இரு சிலைகளும் ஒன்றை ஒன்று தொடாமல் இருக்க வேண்டும். இதனால் எதிர்மறையான ஆற்றல் ஏற்படுத்தாது. அவற்றை வீட்டில் வெவ்வேறு இடங்களில் வைக்கலாம்.

பல சமயங்களில் நமது வழிபாட்டு இல்லத்தில் ஒரு கடவுள் சிலை அதிகமாக மாறுவது நடக்கிறது. நாம் வெவ்வேறு காரணங்களுக்காக அதை வாங்கி வைப்போம். ஆனால் இதை செய்யக்கூடாது. உங்கள் வழிபாட்டு இல்லத்தில் ஒரே ஒரு சிலையை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் அவற்றை இணைத்து நிறுவவும். இது உங்கள் பூஜையறையில் எப்போதும் நேர்மறை ஆற்றலை தரும். சிலைகளை வைக்கும்போது உங்கள் முதுகைக் காட்டக்கூடாது.  

arrange idols in pooja room

இதையும் படிங்க: சனி வக்ர பெயர்ச்சியால் யாருக்கு யோகம்? குறிப்பா இந்த 5 ராசிகள் ரொம்ப கவனமா இருக்கணும்!

ஒரே கடவுளின் சிலைகளை மட்டுமே வீட்டில் வைத்து வழிபடக் கூடாது என்று கூறப்படுகிறது. இரண்டு விநாயகர் சிலைகள் இருந்தால், அவற்றை வீட்டில் வெவ்வேறு இடங்களில் வைக்கலாம். இதனுடன், எந்த சிலையை வைத்தாலும் அது உக்கிரமான வடிவில் இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனால் வீட்டில் கருத்து வேறுபாடும், மனக்கசப்பும் அதிகமாகிறது. இதனால் குடும்பத்தில் பிரச்சனைகள் நீடிக்கின்றன.

ஒருவேளை சிலைகள் சிதையவோ, உடையவோ தொடங்கினால், உடனடியாக அவற்றை வழிபாட்டுத் தலத்தில் இருந்து அகற்ற வேண்டும். ஏனென்றால் உடைந்த சிலைகள் வீட்டில் எதிர்மறையான ஆற்றலை ஏற்படுத்துகின்றன.வாஸ்து விதிகளின்படி வீட்டுக் கோயிலில் சிலைகளை நிறுவினால், உங்கள் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சியும், வளமும் இருக்கும். 

இதையும் படிங்க: உங்க ராசிக்கு எந்த பொருளை வீட்டில் வைத்தால் பணத் தட்டுப்பாடு வராது!!

Follow Us:
Download App:
  • android
  • ios