பணத்தை பெருக்கி ,கடன் தீர பச்சை கிளி பரிகாரத்தை செய்து பாருங்க. உங்க பணக்கஷ்டங்களுக்கு முடிவு வரும்
பணத்தை பெருக்கி,கடன் தீர உதவும் பச்சை கிளி பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும்? எப்போது செய்ய வேண்டும் போன்ற விளக்கங்களை இந்த பதிவில் காணலாம்

நம்மில் பலரும் இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டு வேலை செய்து காசு சம்பாதித்தாலும் சேமிக்க முடியாமல் வாங்கின கடனை அடைக்கவே சரியா போகுது என்று நினைக்கிறார்கள். சம்பளத்தில் கொண்டு வந்த பணம் முழுதும் கடனுக்கோ அல்லது வட்டி கட்டவோ சரியா போகுதா? கையில் பணம் நிற்காமல் கரைந்து போகிறதா? அத்தியாவசிய தேவைக்கு கூட மீண்டும் கடன் பெரும் நிலைமை உண்டாகுதா? இப்படி மேலும் மேலும் கடன் சுமை உங்கள் கழுத்தை நெறிக்குதா?
அப்படியெனில் பணத்தை பெருக்கி, கடனை தீர்க்க, பணத்தை சேமிக்க செய்யும் பச்சை கிளி பரிகாரத்தை செய்து பாருங்க. உங்கள் பணக் கஷ்டங்கள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும்.
பணத்தை பெருகி,கடன் தீர உதவும் பச்சை கிளி பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும்? எப்போது செய்ய வேண்டும் போன்ற விளக்கங்களை இந்த பதிவில் காணலாம். கடன் தீர பச்சைக்கிளி பரிகாரம். இது என்ன விதமான பரிகாரமாக இருக்கு என்று நினைக்கிறீர்களா? இது ஒரு தொன்மையான பரிகாரம். இன்றும் இதனை சில கிராமங்களில் பின்பற்றி வருகிறார்கள்.
நாம் புறாக்கள் அல்லது காகத்திற்கு உணவு போடுவதை பார்த்து இருப்பீர்கள்.பசுக்கள், நாய்கள், குரங்குகள் என்று பல்வேறு விதமான உயிரினங்களுக்கு உணவு கொடுப்பதை பார்த்து இருப்பீர்கள். அந்த வகையில் இன்று நாம் பச்சை கிளிக்கு என்ன உணவு தரலாம்,எப்போது தரலாம் போன்ற தகவல்களை பார்க்கலாம்.
வீட்டில் வளர்க்கும் பச்சை கிளிகளுக்கு இதனை செய்தல் கூடாது. கடைகளில் விற்கப்படும் பச்சை கிளிகளுக்கு புதன் கிழமை அன்று மதிய நேரத்தில் பச்சை வாழைப்பழத்தினை உணவாக கொடுக்கலாம் அல்லது பச்சை மிளகாய் பழத்தினை ( பழுத்த பச்சை மிளகாய்) உணவாக கொடுக்கலாம். இதனை 3 வாரங்கள் செய்து வரவே படிப்படியாக உங்கள் கடன் சுமை குறைவதை நீங்கள் தீருவதை உணரலாம்.
பச்சை கற்பூரம், ஏலக்காய் போன்று இந்த பச்சை வாழைப் பழத்திற்கும் பணத்திற்கும் ஒரு தொடர்பு உள்ளது. கடன்கள் தீரும், பணவரவை அதிகப்படுத்தும். தவிர பச்சை கிளிகளை கொண்ட பெண் தெய்வங்களான மதுரை மீனாட்சி அம்மனையும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளையும் தரிசனம் செய்தால் மிகவும் சிறப்பு.
மீனாட்சி அம்மனை புதன் ஹோரையிலும், ஆண்டாளை சுக்கிர ஹோரையிலும் தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு. இந்த திருத்தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள் பச்சைக்கிளி பரிகாரத்தை மட்டும் செய்தால் கூட போதும்.
பணவரவை பெருக்கி தந்து, உங்கள் கடன் சுமையை குறைகவதை கண் கூடாக பார்க்கலாம். சாஸ்த்திரங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் இதனை செய்து பார்த்து பலன் அடையுங்கள்.