ஆடி மாத வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு உகந்த நாட்கள். விரதமிருந்து, அம்மனுக்கு பிடித்தவற்றை படைத்து வழிபட்டால் சகல நன்மைகளும் கிடைக்கும். கோவிலுக்குச் சென்று வழிபடுவதும் சிறப்பு.
ஆடி மாதம் தமிழர்களுக்கே உரிய ஆன்மிகத் தெய்வீக தன்மை கொண்ட மாதம் என்றால் அது மிகையல்ல. ஆடி மாதம் அம்மனுக்கு உரிய மாதம் என்பதால் இம்மாதத்தை பெண்கள் மிகவும் முக்கியமாகக் கருதுகின்றனர். ஆடி வெள்ளிக்கிழமைகள் இறைவி பார்வதியை வழிபட சிறந்த தினங்களாக இருக்கின்றன. 2025-இல் இரண்டாவது வெள்ளிக்கிழமை ஜூலை 25 அன்று வருகிறது. இந்த நாள், தாயார் அருளை பெற, சுபமான வாழ்வு வாழ, நோயில்லாத உடலை பெற, வீட்டில் அமைதி மற்றும் செழிப்பைப் பெற மிகவும் சிறந்த நாள்.
விரதம் இருக்கும் முறை
இந்த நாளில் பெண்கள் விரதம் இருந்து அம்மனை பூஜித்தால் சந்தேஷமும் நிம்தியும் கிடைக்கும். அதிகாலையிலே எழுந்து வீட்டை சுத்தம் செய்து வாசலில் மாக்கோலம் போட்டு அம்மனை வரவேற்க வேண்டும். தாயாருக்கு பிடித்த பூக்கள், மஞ்சள் காப்பு, வெற்றிலை, பாக்கு, தேங்காய், வடைமாலை ஆகியவற்றுடன் சிறப்பு அலங்காரம் செய்ய வேண்டும். மஞ்சள் கலந்த நீரால் அம்மனின் பாதங்களை கழுவி பூஜை செய்ய வேண்டும். சாமி அறையில் பட்டுப் புடவையில் அம்மனை அழகாக அலங்கரித்து, "லலிதா சஹஸ்ரநாமம்", "அஷ்டோத்திரம்", "அம்மன் பாடல்கள்" போன்றவை மனதார பாடி பிரார்த்தை செய்யலாம்.
2வது ஆடி வெள்ளி விரதம்
இந்த நாளில் பெண்கள் தங்களுக்குப் பக்குவமாய்த் தெரிந்த நோன்பு விரதங்களை மேற்கொண்டு, பால், பழம், வெள்ளரிக்காய் போன்றவற்றை மட்டுமே அருந்தி விரதம் மேற்கொண்டால் அவர்களுக்கு அம்மன் வேண்டியதை கொடுப்பாளர். மாலை நேரத்தில் தீபம் ஏற்றி தாயாரை மங்கள தீபம் மூலமாக வணங்கினால் சுபீட்சம் கிடைக்கும்.இரண்டாவது வெள்ளிக்கிழமையில் அம்மனுக்கு நெய்வேத்யமாக அவியல், பாயாசம், சுண்டல் போன்றை படைத்து வழிபடவேண்டும். பெண்கள் தங்கள் குடும்ப நலன் மற்றும் கணவனின் ஆயுள் வேண்டியும், கன்னியர் நல்ல வாழ்கை உறுதி பெற இந்த பூஜை உதவுகிறது.
கோவிலுக்கு சென்று வந்தால் கோடி நன்மை
ஆடி வெள்ளி கிழமைகளில் கோவிலுக்கு செல்வது கோடி நன்மையை தரும். விரதம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கோவிலுக்கு சென்று வந்தால் நீங்கள் நினைக்கும் நல்லவைகள் எல்லாம் உடனே கிடைக்கும். இந்த நாளில் சமயபுரம் மாரியம்மன், மதுரை மீனாட்சியம்மன், திருவானைக்கா அக்கிலாண்டேஸ்வரி, திருநெல்வேலி நெல்லையம்மன், மற்றும் ஊரூர் மாரியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறும். அதில் பங்கேற்று வழிபாடு நடத்தினால் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும். குடும்ப ஒற்றுமை கூடும். நினைத்த காரியங்கள் வெற்றி அடையும். மனதில் நிம்தியும், நல்ல சித்தனைகளும் ஆட்கொள்ளும். அடுத்தவர்களுக்கு உதவும் மனப்பான்மையும், நேர்மையான எண்ணங்களும் உங்களை வழிநடத்தும். இந்த நாள் தாயாரின் அருள் கிடைக்கும் பாக்கியமான நாளாகவே கருதப்படுகிறது. மனதார வழிபட்டால், குடும்பத்தில் அமைதி, வியாதிகள் விலகி, வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும் என்பது நம்பிக்கை. பிரசித்தி பெற்ற கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் அருகே இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று இறைவியை வழிபட்டு நிம்மதி சந்தோஷம் அடையலாம்.
ஆடி வெள்ளி வழிபாடு கேட்டதை தரும்
ஆடி வெள்ளிக்கிழமைகளில் தாயாரை நோக்கி கூறப்படும் "ஓம் சக்தி!" என்பது வெறும் வார்த்தையல்ல. அது தாயின் சக்தியை அழைக்கும் மந்திரம். ஆடி மாதங்களை அம்மனை வழங்கி வரவேற்றால் அவர் நம்மை நல்வழிப்படுத்தி ஆரோக்கியத்தையும் நிம்மதியையும் செல்வத்தையும் நற்சிந்தனையையும் அள்ளித்தருவாள்!
