அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவில் ஆடிப்பூரம்.. நாளை கொடியேற்றத்துடன் துவக்கம் - முழு விவரம்!
காமதேனும் வாகனத்தில் அம்மன் வீற்றிருக்க, அவர் வீதி உலா செல்லும் நிகழ்வும் நாளை நடைபெறும்.
இன்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளி, பல ஆலயங்களில் இந்நாள் வெகு விமர்சையாக அனுசரிக்கப்பட்டது. இன்று மகாலட்சுமிக்கு உகந்த நாள் என்பதால் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இந்நிலையில் நாளை திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஆடிப்பூரம் விழா நடைபெறவுள்ளது.
நாளை சனிக்கிழமை காலை 5.45 மணி முதல் 6.45 மணிக்குள் ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக துவங்க உள்ளது. இந்த நல்ல நாளில் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழாவும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் பிறந்த கிழமை எது? உங்களுக்குள் இருக்கும் சிறப்பான குணங்கள் இதுதான் - வாங்க பார்க்கலாம்!
இந்த வைபோகத்தை முன்னிட்டு நாளை சனிக்கிழமை மாலை பராசக்தி அம்மனுக்கு வளைபூட்டு நிகழ்வும், அதை தொடர்ந்து, காமதேனு வாகனத்தில் அம்மன் வீற்றிருக்க, அவர் வீதி உலா செல்லும் நிகழ்வும் நடைபெறும்.
ஆடி மாதத்தில் தீமிதி திருவிழாவும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டு தோறும் நடக்கும் இந்த ஆடிப்பூரம் உச்சவம் பிரசித்திபெற்ற ஒன்றாகும். நாளை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பெருமளவு பக்தர்கள் கூட்டம் கூடவிருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பெரிய அளவில் செய்யப்பட்டுள்ளது.
Vastu Tips: அலுவலகத்தில் எதிர்மறை நீங்க...வாழ்க்கையில் வெற்றி பெற இந்த வாஸ்து குறிப்பு உதவும்..!!