Asianet News TamilAsianet News Tamil

Aadi Month 2023: இன்று ஆடி மாதப்பிறப்பு.. ஆடி மாதத்தின் சிறப்புகள் என்னென்ன? முழு விவரம் இதோ!!

ஒவ்வொரு ஆடி மாதத்திலும் ஆலய வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்நாளில் வழிப்பட்டால் மிகுந்த பலன் கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது. குறிப்பாக இந்நாளில் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

aadi month 2023 date time in tamil calendar festivals list in tamil
Author
First Published Jul 7, 2023, 11:09 AM IST

ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அந்த வகையில் ஆடி மாதம் மிகவும் தனித்துவமான சிறப்பை பெற்றது. ஆடி மாதம் நடப்பாண்டில் வரும் ஜூலை மாதம் 17ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் அதாவது ஆகஸ்ட் 17ஆம்  தேதியில் முடிவடைகிறது. இந்த ஆடி மாதத்தில் கோவில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். அதிலும் குறிப்பாக, அம்மன் கோவிலில் ஆடி மாத கொண்டாட்டம் தனிச்சிறப்பாக இருக்கும். இந்த மாதத்தில், ஆடிப்பண்டிகை, ஆடிப் பிறப்பு, போன்ற பல முக்கியமான தமிழ் இந்து கொண்டாட்டங்கள் உள்ளன. ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய், ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடி பெருக்கு முதலியன..

ஆடி மாதம் 2023 கொண்டாட்டங்கள் மற்றும் பாரம்பரியங்கள்:
ஆடி மாதம் முதல் நாள் மக்கள் ஆடிப் பண்டிகை மற்றும் ஆடிப் பிறப்பு கொண்டாடுகிறார்கள். பெண்கள் வீடுகளின் முன் பெரிய கோலங்கள் வரைவார்கள். ஆடி மாதத்தின் அனைத்து நாட்களிலும் கோலம் வரையப்படுகிறது. மேலும் மா இலைகளின் மாலைகள் கொண்டு கதவுகளை அலங்கரிக்கின்றன. மக்கள் வீட்டில் பூஜைகள் செய்து, கோவில்களில் வழிபடுகிறார்கள். மேலும் பாயாசம், வடை போன்ற விசேஷ உணவு வகைகளுடன் விருந்து படைக்கிறார்கள். மேலும் ஆடி மாதத்தின் முதல் நாளில், திருமணமான பெண்கள் தங்கள் தாலியில் மஞ்சள் கயிறு கட்டுவது வழக்கம்.

இதையும் படிங்க: “ஆடி அமாவாசனை சிறப்பு யாத்திரை” நெல்லை - காசி இடையே பாரத் கௌரவ் சிறப்பு ரயில்

ஆடி செவ்வாய்:
ஆடி மாதத்தில் வரும் அனைத்து செவ்வாய் கிழமைகளும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்நாளில் கோவில்களில் வழிபாடு மேற்கொண்டால் மிகுந்த நன்மைகளைத் தரும்.

ஆடி வெள்ளி:
ஆடி மாதத்தில் வரும் அனைத்து செவ்வாய்கிழமைகளைப் போல் அனைத்து வெள்ளிகிழமைகளும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்நாளில் பக்தர்கள் கோவில்களில் குவிந்து காணப்படுவர்.  குறிப்பாக, ஆடியின் கடைசி வெள்ளிக்கிழமையில் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். மேலும் இந்நாளில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கோயில்களில் கூழ் ஊற்றுவர்.

ஆடிப்பூரம்:
இது மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் ஆகும். இந்நாள் ஆண்டாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாகும். ஜூலை 22ஆம் தேதி ஆடிப்பூரம் ஆகும்.

ஆடிப்பெருக்கு:
ஆடி மாதத்திலே மிகப்பெரிய விழாவென்றால் அது ஆடிப்பெருக்கு தான். இந்நாளில் புதிதாக திருமணமான பெண்ணுக்கு தாலிப்பிரித்து கோர்க்கும் நிகழ்வு நடைபெறும். அதுபோல் குடும்பமாக கோவிலுக்குச் சென்று வழிபடுவர். ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆடி கிருத்திகை:
ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஆடி கிருத்திகை ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்நாளில் கோவில்களில் முருகப்பெருமானுக்கு  சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.

ஆடி அமாவாசை:
ஆடி அமாவாசையானது ஆடிப்பெருக்கு, ஆடி கிருத்திகை போலவே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாள் ஆகும். அந்நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கப்படும். இந்த ஆடி அமாவாசையானது ஆகஸ்ட் 16ஆம் தேதி வருகிறது.  

வரலட்சுமி பூஜை:
இந்த பூஜையானது, ஒவ்வோரு பெண்களும் தங்களது மாங்கல்யம் பலம் பெற வேண்டும் என்பதற்காகவும், தங்களது குடும்பம் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காகவும் நடத்தப்படும் பூஜை தான் வரலட்சுமி பூஜை ஆகும். இது ஆகஸ்ட் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios