Asianet News TamilAsianet News Tamil

100 வயதில் கன்னி சாமியாக சபரிமலை சென்ற மூதாட்டி.. ஐயப்பனை மனமுருக தரிசித்து நெகிழ்ச்சி..

கேரளாவை சேர்ந்த 100 வயது மூதாட்டி ஒருவர் கன்னிசாமியாக சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

100 year old kerala woman parukuttiyamma makes maiden pilgrimage to sabarimala.. Rya
Author
First Published Dec 8, 2023, 10:51 AM IST

கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கார்த்திகை மாதம் தொடங்கியது முதல் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை விரதம் மேற்கொண்டு சபரிமலை கோயிலுக்கு சென்று வருகின்றன. சபரிமலைக்கு செல்ல 10 முதல் வயதுக்குள்ளான பெண்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. அதே நேரம் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் சபரிமலைக்கு செல்வதுண்டு.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அந்த வகையில் கேரளாவை சேர்ந்த 100 வயது மூதாட்டி ஒருவர் கன்னிசாமியாக சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். வயநாடு மாவட்டம் மூந்நானக்குழியை சேர்ந்த்வர் பாருக்குட்டி அம்மா. அவர் தனது 100 வயதில் மாலையிட்டு விரதமிருந்த அவர் தனது பேரப்பிள்ளைகள் மற்றும் பிள்ளைகளுடன் பம்பை வந்தார். பின்னர் டோலி மூலம் சபரிமலை சன்னிதானம் சென்று சாமி தரிசனம் செய்தார். 3 தலைமுறைகளை சேர்ந்தவர்கள் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து பாருக்குட்டி அம்மாவுக்கு சால்வை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது. சாமி தரிசனம் செய்த பின்னர் பாருக்குட்டி அம்மா பேசிய போது “ முன்பே சபரிமலைக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அந்த ஆசை நிறைவேறவில்லை. 100 வயதில் தான் சபரிமலைக்கு செல்ல வேண்டும் என்று அப்போது முடிவு செய்தேன். அதன்படி இப்போது சபரிமலைக்கு வந்துவிட்டேன். பதினெட்டாம் படியில் ஏறிச்சென்று பொன்னம்பலத்தை தரிசனம் செய்தேன். பகவானை பார்த்த போது கண்ணும் மனதும் நிறைந்துவிட்டது.

"Ayyan App" போதும்.. சபரிமலை குறித்த அனைத்து தகவல்களும் இனி உங்கள் கையில்.. எப்படி பயன்படுத்துவது?

சபரிமலைக்கு வரும் வழியில் எனக்கு நிறைய பேர் உதவி செய்தனர். அவர்களையும் பகவான் பாதுகாக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். எனது பேரன் கிரீஷ்குமாரின் மனைவி இஸ்ரேலில் வேலை செய்து வருகிறார். எனவே பாலஸ்தீனம் – இஸ்ரேல் இடையேயான போர் முடிவுக்கு வர வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்தேன்..” என்று தெரிவித்தார்.  

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios