அருள்நிதி கிராமத்து நாயகனாக அசத்தினாரா? சொதப்பினாரா? - கழுவேத்தி மூர்க்கன் பட விமர்சனம் இதோ
கெளதமராஜ் இயக்கத்தில் அருள்நிதி நாயகனாக நடித்துள்ள கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் அருள்நிதி. அவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் கழுவேத்தி மூர்க்கன். இப்படத்தை ராட்சசி படத்தின் இயக்குனர் கெளதமராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும் சந்தோஷ் பிரதாப், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்து உள்ளார். அருள்நிதி நீண்ட இடைவெளிக்கு பின்னர் கிராமத்து நாயகனாக நடித்திருந்த இப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. தமிழகத்தில் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் வெளியிட்டுள்ளது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் டுவிட்டரில் விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... ஒரு சூறாவளி கிளம்பியதே... மாஸ் லுக்கிற்கு மாறிய லெஜண்ட் சரவணன் - போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
நல்ல மெசேஜ்... ஆனா
கழுவேத்தி மூர்க்கன் வழக்கமான கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக உள்ளது. உற்சாகமூட்டும் வகையில் இல்லை. இரண்டாம் பாதியில் மட்டும் சில காட்சிகள் நன்றாக உள்ளது. நல்ல மேசேஜ் ஆனா அதனை விறுவிறுப்பின்றி சொல்லி இருக்கிறார்கள். கிளைமாக்ஸ் அருமை. அருள்நிதி மற்றும் சந்தோஷ் பிரதாப் சிறப்பாக நடித்துள்ளார்கள் என பதிவிட்டுள்ளார்.
அருள்நிதி நடிப்பு செம்ம
கழுவேத்தி மூர்க்கன் விறுவிறுப்பான படமாக உள்ளது. அருள்நிதியின் நடிப்பு வேறலெவல். துஷாரா விஜயன் சிறப்பாக நடித்துள்ளார். சந்தோஷ் பிரதாப் எதிர்பார்க்கவே இல்லை. வெறித்தனமா நடிச்சிருக்காரு. டி.இமானின் பின்னணி இசை நன்றாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.
எதுவும் புதிதாக இல்லை
கழுவேத்தி மூர்க்கன் சராசரிக்கும் குறைவான படமாகவே உள்ளது. மெதுவான திரைக்கதை உடன் கூடிய வழக்கமான கிராமத்து படமாக உள்ளது. எதுவும் புதிதாக இல்லை. முதல்பாதி மோசம், இரண்டாம் பாதி பரவாயில்லை. அருள்நிதி நடிப்பி நன்றாக இருந்தது. துஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளார்கள். டி.இமானின் பின்னணி இசையும் நன்றாக இருந்தது என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... நரைத்த தாடியுடன்... கமல் படத்துக்காக உடல் எடை கூடி ஆளே டோட்டலாக மாறிய சிவகார்த்திகேயன் - வைரலாகும் போட்டோஸ்