யூனிபார்மில் இருக்கும் தன்னிடம் ஐ லவ் யூ சொல்லும் இளைஞரை பெண் போலீஸ் ஒருவர் தர்ம அடி கொடுத்து துவம்சம் செய்யும் வீடியோ  சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் சமூகவலைதளத்தில் யூனிபார்மில் உள்ள ஒரு பெண் போலீஸ், இளைஞர் ஒருவரை தாறுமாறாக அடித்து துவைப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. அத்துடன் அந்த நபரை கெட்ட கெட்ட வார்த்தைகளில் அவர் திட்டி தீர்ப்பதுபோலவும் அதில் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோதான் தற்போது தெலுங்கு பேசும் இளைஞர்களில் ஹாட் டாபிக்,  தெலுங்கு, யூடியூப்  சேனல் நடத்தும் இளைஞர் ஒருவர், பெண்களிடம் "ஐ லவ் யூ" சொல்லி பிராங்க்  செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். அவர் சமீபத்தில் சீருடையில் இருந்த பெண் போலீஸ் ஒருவரிடம் சென்று, ஐ லவ் யூ சொல்லி உருகுகிறார். அதைக்கேட்டு ஆத்திரமடைந்த அந்த பெண் போலீஸ், முதலில் அந்த இளைஞரை  எச்சரித்து போகச் செல்கிறார், ஆனால் அந்த இளைஞர் அதை கேட்காததால் கோபத்தின் உச்சிக்கு சென்ற அந்தப் பெண் போலீஸ், அந்த இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுக்கிறார்.

நடு ரோட்டில் வைத்து அவர் பின்னி எடுக்கும் காட்சியை பலர் வேடிக்கை பார்க்கின்றனர். ஆனாலும் விடாமல் தன் காதலை ஏற்றுக்கொள்ளச் சொல்லி, அந்த இளைஞர் போலீசிடம்  கெஞ்சுகிறார்,  உடனே இந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு  தன்னுடன் வருமாறு அழைக்கும் அந்த பெண் போலீஸ், பாதி வழியில் சென்றதும் மீண்டும் ஆத்திரத்தில் அந்த இளைஞரை அடிக்க ஆரம்பித்துவிடுகிறார். ஒரு கட்டத்தில் அடி தாங்க முடியாமல், தன்னை மன்னித்து விடுங்கள் தான் ஒரு  யூட்யூப் பிராங்கர் என்று கூறி அந்த இளைஞர் தப்பிக்க முயல, ஆத்திரத்தின் உச்சிக்கு சென்று பெண் போலீஸ்  அந்த இளைஞரை மிகமோசமாக கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறார்.  இந்த வீடியோ சில தினங்களாக தெலுங்கு பேசும் மக்களிடம் வைரலாகி வந்த நிலையில் அது தமிழ் பேசும் மக்களிடம் தற்போது வேகமாக பரவிவருகிறது.