எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பிதழ் மட்டும் வழங்கப்படவில்லை. முறைப்படி அழைப்பு விடுத்தும் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி விழாவுக்கு வரவில்லை. 

கருணாநிதி படத்திறப்பு விழாவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்திருந்தோம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதுகுறித்து வர் கூறுகையில், ‘’எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பிதழ் மட்டும் வழங்கப்படவில்லை. முறைப்படி அழைப்பு விடுத்தும் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி விழாவுக்கு வரவில்லை. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா படத்திறப்பு விழாவில், எதிர்கட்சியாக இருந்த எங்களுக்கு உரிய மரியாதை இல்லை என்பதால் கலந்துக்கொள்ளவில்லை.

ஆனால் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்திறப்பு விழாவில் உரிய மரியாதை அளிப்போம் என்று கூறியும் அதிமுக பங்கேற்கவில்லை. நான் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசியில் பேசி தவறாமல் வர வேண்டும் என கூறினேன்; சேலம் போய்க்கொண்டிருக்கிறேன், கலந்து பேசி சொல்கிறேன் என்றார்; போய்ச்சேர்ந்தவர், வரவில்லை என்பதை அழைத்த என்னிடம் சொல்லவில்லை.

மேகதாது அணை பிரச்சனையில் உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்கமாட்டோம் என கர்நாடக கூறுவது ஏற்கத்தக்கதல்ல’’என கூறினார்.