Asianet News TamilAsianet News Tamil

என்னை பனிக்குடத்தில் தாங்கிய தாய் நீங்கள்: கருணாநிதிக்கு ராசாவின் கண்ணீர் கடிதம்... 

You protected me like a baby in mothers womb Raja says in his letter to Karunanidhi
You protected me like a baby in mother's womb Raja says in his letter to Karunanidhi
Author
First Published Dec 23, 2017, 3:28 PM IST


கருணாநிதிக்கு ஆ.ராசா மீது எப்போதும் தனி கரிசனம் உண்டு. ஸ்பெக்ட்ரம் விஷயம் ’மெகா ஊழல்’ என்று வெடிக்க துவங்கியபோது தி.மு.க.வுக்கு உள்ளிருந்தே ராசாவுக்கு எதிராக விமர்சனங்கள் வெடித்தன. ஸ்பெக்டரம் விஷயம் தி.மு.க.வின் வெற்றியை தேர்தலில் பாதித்தபோது ‘ராசாவை கட்சியை விட்டு வெளியேற்றுங்கள்’ என்று தலைமையை நோக்கி அழுத்தம் வந்தது. 

ஸ்டாலினுக்கு கூட ராசா மீது ஒரு வெறுப்பு வந்தது ஆனால் கடைசி வரை ராசாவை விட்டுக் கொடுக்காமல் இருந்தவர் கருணாநிதிதான். ’நீ வழக்கை எதிர்கொள். தீர்ப்பை பார்ப்போம்.’ என்று தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தார். 

இந்நிலையில் 2ஜி தீர்ப்பு வெளியாகி ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலையாகிவிட்ட நிலையில் கருணாநிதியால் இந்த சந்தோஷத்தை முழுமையாக உணர முடியவில்லை. இந்த சூழலில் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து ஆ.ராசா ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில்...

You protected me like a baby in mother's womb Raja says in his letter to Karunanidhi

“தீர்ப்புக்காக டெல்லி சென்றபோது ‘வெற்றி பெற வாழ்த்துங்கள்’ என்று உங்கள் காதருகில் சொல்லி வணங்கினேன். உங்கள் உதடுகள் ‘சரி’ என உச்சரித்தபோது சம்ப்தம் வரவில்லை. ஆனாலும் உங்களின் வலது கரம் உயர்த்தி, புன்னைகையோடு வாழ்த்தினீர்கள். உங்களின் வாழ்த்து, புன்னகைக்கு முன் இந்த பிரபஞ்சம் சுருங்கிவிட்டதாகவே எனக்கு பட்டது. 

கொட்டும் மழையில், வீசும் புயலில், சரளை கற்கள் நிறைந்த மலை உச்சியை நோக்க், நடப்பதைப்போல, அரசு மறும் அரசமைப்பு நிறுவனங்களும், ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் தாக்குதல் தொடுத்தன. அவற்றை எதிர்கொண்டு நடத்திய அலைவரிசை பயணத்தில் நான் கரைந்துவிடாமலிருக்க பனிக்குடத்தில் வைத்து என்னை பத்திரமாக தாங்கிய தாய் நீங்கள்! எனும் நன்றியுணர்ச்சியோடு இந்த தீர்ப்பை உங்கள் காலடியில் வைத்து வணங்குகிறேன்.”என்று கண்ணீர் மல்க எழுதியிருக்கிறார். 

You protected me like a baby in mother's womb Raja says in his letter to Karunanidhi

தன் சிஷ்யன் தனக்கு எழுதியிருக்கும் நெகிழ்வான கடிதத்தை வாசித்து உணர்ந்து கொள்ளும் நிலையில் கருணாநிதி  இல்லை என்பதுதான் பரிதாபமே!

Follow Us:
Download App:
  • android
  • ios