தற்போது நடைபெற்று வரும் ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது என்றும், 4 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி நீடிக்கும் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

தமிழக அரசியல் சூழ்நிலையில் தற்போது பரபரப்பின் உச்சத்தை எட்டி வருகிறது. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் இணைப்பால் பெரிதும் கலக்கமுற்றது டிடிவி தரப்பு.

டிடிவிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் எம்எல்ஏக்கள் ஒவ்வொருவதாக அவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இன்று வரை டிடிவிக்கு 23 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

எடப்பாடிக்கு அளித்து வந்த ஆதரவை டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றுள்ள நிலையில், அடுத்து என்ன நிகழும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கரூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது என்றார். 

அடுத்த 4 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தொடர்ந்து நீடிக்கும் என்றும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.