அதிமுகவை பற்றி விமர்சித்த சீமான். ’அலிபாவும் நாற்பது திருடர்களும் போல அம்மாவும் 40 திருடர்களும்... அம்மாவாவது இப்போது இல்லை. 40 திருடர்கள் இருக்கிறார்கள்’ என விமர்சித்து இருந்தார்.

 

அதற்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ’’நாக்கை மடக்கி பேச வேண்டும் இல்லையென்றால் நாக்குக்கு ஆபத்து . நாட்டுக்கு ஒரு வப்பாட்டி வைத்திருக்கிற சீமான் இனி நீ பேசக்கூடாது. ராஜிவ் காந்தி கொலை குறித்து சீமான் கூறியது, முட்டாள் தனமான மடத்தனமான வார்த்தை.

 வாடகை கொடுக்க வக்கு இல்லாதவன். யோக்கியன் போல பேசுகிறான். நாங்களும் பச்சைத் தமிழர்தான். அதென்ன இவனுங்க மட்டும்தான் தமிழர்களா? அதென்ன நாம் தமிழர்..? 4 ரவுடிப்பயலுகளை வைத்துக்க்கொண்டு வெளிநாட்டுக்கு போய் பணம்  வசூல் செய்து கொண்டு இருக்கிறவன் எங்களைப்பற்றி பேசலாமா? இப்படிப் பேசிப்பேசியே விடுதலைபுலிகளை அழிச்சிட்டீங்க. நீ சந்தோஷமாக இருக்க அடுத்தவனை ஒழிச்சிட்டு இருக்கிற. ஒவ்வொரு நாட்டிலும் வப்பாட்டி வெச்சிருக்கிற... உன்னை நம்பி இருந்தவங்கள்லாம் விதவையா இருக்காங்க. 


 
எந்த தமிழரும் ராஜீவ்காந்தி படுகொலையை ஆதரிக்கல. தமிழன்னு சொல்லிக்கிறதுக்கு சீமான் வெட்கப்படணும். அவர் மீது தமிழக அரசும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும். தமிழக அரசு மீதும் அமைச்சர்கள் மீதும் குறை சொல்ல சீமானுக்கு என்ன தகுதி உள்ளது? 10 ஆண்டுகளாக வாடகை கொடுக்காமல் வீட்டை காலி செய்யாத சீமான் ஒன்றும் யோக்கியன் கிடையாது’’என அவர் கடுமையாக திட்டியுள்ளார்.