Asianet News TamilAsianet News Tamil

சம்சாரம் இல்லாமல் கூட வாழலாம், மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது... செந்தில் பாலாஜியிடம் கோரிக்கை..!

சம்சாரம் இல்லாமல் கூட வாழலாம், மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது என பாமக எம்.எல்.ஏ., ஜி.கே.மணி பேசினார். 

You can live even without samsara, you can't live without electricity ... Request to Senthil Balaji ..!
Author
Tamil Nadu, First Published Sep 6, 2021, 12:58 PM IST

சம்சாரம் இல்லாமல் கூட வாழலாம், மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது என பாமக எம்.எல்.ஏ., ஜி.கே.மணி பேசினார். 

சட்டப்பேரவையில் கேள்வி, பதில் நேரத்தின்போது, பேசிய ஜி.கே.மணி, சம்சாரம் இல்லாமல் கூட வாழலாம், மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது பென்னாகரம் தொகுதியில் மின்சார கோட்டம் அமைக்க வேண்டும்'’எனக் கோரிக்கை வைத்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ், ஜி.கே.மணி ஆகியோர் சோழிங்கநல்லூர் தொகுதியில் துணை மின் நிலையமும், பென்னகரம் தொகுதியில், உபகோட்டத்தை கோட்டமாகவும் தரம் உயர்த்த அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னுரிமை அடிப்படையில், சோழிங்கநல்லூர் தொகுதியில் துணை மின் நிலையம் அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்கும். You can live even without samsara, you can't live without electricity ... Request to Senthil Balaji ..!

மாநிலம் முழுவதும் 176 கோட்டங்கள் செயல்பட்டு வருகிறது. பென்னாகரம் தொகுதியில் புதிய கோட்டங்கள் அமைப்பது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.You can live even without samsara, you can't live without electricity ... Request to Senthil Balaji ..!

அதேபோல், தமிழ்நாடு முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு 8 ஆயிரத்து 905 மின்மாற்றிகளை மாற்ற பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதைவட கம்பிகள் இல்லாத இடங்களில் ஆய்வு செய்யப்பட்டு திட்டமதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’எனத் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios