Asianet News TamilAsianet News Tamil

பாஜக முதல்வர் வேட்பாளர் நீங்கதான்... பாமக வெளியே போகட்டும்... திருமாவளவனுக்கு வலைவீசிய பாஜக..!

நீங்கள் வருவதனால் பாமக எங்கள் கூட்டணி இருந்து வெளியேறி சென்றாலும் அதை பற்றி எங்களுக்கு பிரச்சினை இல்லை. 

You are the BJP chief ministerial candidate ... Let PMK go out ... BJP who blogged for Thirumavalavan ..!
Author
Tamil Nadu, First Published Nov 23, 2021, 6:46 PM IST

பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக என்னை நிறுத்த முயற்சி நடந்தது விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

’’2014 ஆம் ஆண்டிலேயே மக்கள் நலக் கூட்டணியை களைத்துவிட்டு நீங்கள் வெளியே வாருங்கள். எங்கள் கூட்டணிக்கு தலைமை தாங்குங்கள். உங்களை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். நீங்கள் வருவதாக இருந்தால் பாமக வெளியே சென்றாலும் எங்களுக்கு பிரச்சினை இல்லை. நீங்கள் வருவதனால் பாமக எங்கள் கூட்டணி இருந்து வெளியேறி சென்றாலும் அதை பற்றி எங்களுக்கு பிரச்சினை இல்லை.

 You are the BJP chief ministerial candidate ... Let PMK go out ... BJP who blogged for Thirumavalavan ..!
உங்களையும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கிறோம். அதைவிட என்ன ஒரு மாற்றம் வேண்டும்? இன்றைக்கு உங்களுக்கு ஒரு சாதிக்கு மட்டும் ஆதரவாக இருப்பதாக நினைத்துக் கொள்பவர்கள், உங்களை எதிரியாக நினைக்கும் மற்ற ஜாதியினர், நீங்கள் பாஜகவுக்கு வந்தால் ஒரே நிமிடத்தில் ஜாதித் தலைவர் என்ற முத்திரையை நீக்கி, பொது தலைவர் என்ற இமேஜ் உருவாகிவிடும். நீங்கள் அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க வேண்டாம். சமூக இயக்கத் தலைவர்களை சந்தியுங்கள். 

 அரசியல் கட்சிகளிடம் விளக்கம் சொல்லி எந்த பயனும் இல்லை. சமூக இயக்கத் தலைவர்களும் சந்தித்து விளக்கம் சொல்லுங்கள் என்று கூறினார்கள். ஆனால் நான் அதற்கு சம்மதிக்கவில்லை. அவர்கள் காட்டிய ஆசைக்கு நான் மயங்கவில்லை. மத்திய அமைச்சர் பதவி கூட தருகிறேன் என்று கூறினார்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை பொறுத்தவரை நட்பை பேணும். அதேசமயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் சமரசம் செய்து கொள்ளாது.You are the BJP chief ministerial candidate ... Let PMK go out ... BJP who blogged for Thirumavalavan ..!

 பாஜக நச்சுக் கருத்துகளை பரப்பி கொண்டே வாக்குவங்கி உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். மதவெறி அரசியல் பரப்புகிறார்கள். பிற மதங்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைக்கிறார்கள். அத்தோடு ஆதிகாலத்திலிருந்து சமூக ஒழுங்கை இங்கே கட்டமைக்க வேண்டும் என்று துடிக்கிறார்கள்.

You are the BJP chief ministerial candidate ... Let PMK go out ... BJP who blogged for Thirumavalavan ..!

அதிமுகவில் ஜெயலலிதா இல்லாதபோது கூட 100 சதவீத இடைவெளியில் மட்டுமே அதிமுக தோல்வியைத் தழுவியது 60, 70 இடங்களுக்கு மேல் அதிமுகவினர் ஜெயித்து இருக்கிறார்கள். இதற்கு எடப்பாடி, ஓபிஎஸ் மீது உள்ள நம்பிக்கை என்று சொல்லமுடியாது. ஏற்கனவே இருக்கக்கூடிய பின்புலம் தான். பெரியார் அரசியல், அண்ணா அரசியல் என்கிற பின்புலம். திராவிட இயக்கம் என்கிற நம்பிக்கை. ஆகையால் சாதி, மத இயக்கங்களுக்கும், மதவாதிகளுக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்கிற ஒரு தன்மை இருப்பதால் தான் திராவிட கட்சிகள் மாறி மாறி இங்கே வெற்றி பெற்று வருகின்றன’’ என அவர் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios