Yogi Adityanath Takes Oath as MLC Along with his Deputies and Ministers
உத்தரப்பிரதேச மேலவை உறுப்பினர்களாக(எம்.எல்.சி.) முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர்கள் கேசவ் ராம்பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா ஆகியோர் நேற்று பொறுப்பேற்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றதையடுத்து கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி அம்மாநில முதல்வராக யோகி ஆதித்யாநாத் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றார்.
கோரக்பூர் எம்.பி,யாக இருந்து கொண்டே ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பு ஏற்றார். எம்.எல்.ஏ. ஆக இல்லாமல் முதல்வராக பொறுப்பு ஏற்றதால், 6 மாதங்களுக்குள் எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்ற நிலை இருந்தது. இதேபோல துணை முதல்வர்களும் எம்.பி.பதவிகளை ராஜினாமா செய்யாமல் பதவி ஏற்றனர்.
இதற்கிடையில், உத்தப்பிரதேச சட்ட மேலவையில் காலியாக உள்ள ஐந்து இடங்களுக்கான இடைத்தேர்தலில் இந்த 3 பேரும், கூடுதலாக ஸ்வந்திரதேவ், மோசின் ராசா ஆகிய அமைச்சர்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் போட்டியின்றி, அனைவரும் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார்.
இதையடுத்து, முதல்வர் ஆதித்யநாத், துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா, திணேஷ் சர்மா, அமைச்சர்கள் மோசின் ராசா, ஸ்வந்திரதேவ் சிங் ஆகிய 5 பேர் நேற்று சட்டசபையில் உள்ள திலக் மண்டபத்தில் மேலவை உறுப்பினர்களாக நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர்.
இதில் மோசின் ராசா என்ற ஒரே ஒரு முஸ்லிம் மட்டுமே யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ், பகுஜன்சமாஜ் கட்சித்த தலைவர் மாயாவதிக்கு அடுத்தார்போல், 3-வது முதல்வராக ஆதித்யநாத் பொறுப்பு ஏற்றார்.
100 உறுப்பினர்கள் கொண்ட மேலவையில் ஆளும் பா.ஜனதா கட்சியின் எண்ணிக்கை 13 உறுப்பினர்களாக அதிகரித்துள்ளது, மற்றவகையில் மேலவையில் எதிர்க்கட்சியே பெரும்பான்மையுடன் உள்ளனர். சமாஜ்வாதி கட்சியில் 61 உறுப்பினர்கள், பகுஜன் சமாஜ் கட்சியில் 9 பேர், காங்கிரஸ் கட்சியில் 2 பேர், ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியில் 12 பேர், 2 இடங்கள் காலியாக உள்ளன.
